பிரதமர் மோடி இந்தியாவுக்கு அவமானம்! அவர் கோழை.. அபிஜித் தீப்கே கடும் விமர்சனம்!
டெல்லி: ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது காக்ரோச் ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், இன்று தனது x பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து பதிவிட்டிருக்கிறார் தீப்கே.
நுறு, இருநூறு கிடையாது.. மொத்தமாக 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் நாடு முழுவதுமிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். இது எல்லாத்துக்கும் SIR நடவடிக்கைதான் காரணம். சரி இந்த நடவடிக்கை யாரால் எடுக்கப்பட்டது என்று கேட்டால்.. தேர்தல் ஆணையம்தான் எடுத்ததாக மத்திய அரசு கூறுகிறது. ஆணையத்தில் மொத்தம் 3 பேர். 1 தலைமை ஆணையர், 2 ஆணையர்கள். இவர்கள் 3 பேரும் சேர்ந்து எடுத்தார்களா? என்றால்.. அதுதான் கிடையாது.

2 ஆணையர்களும் SIR குறித்து பலமுறை அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர். அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் தன்னிச்சையாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் SIR குறித்து முடிவெடுத்திருக்கிறார் என்பதுதான் தற்போது குற்றச்சாட்டு. எனவே ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று CJP, SFI, AISA, DYFI போன்ற அமைப்புகள் டெல்லியிலும், மும்பையிலும் போராட்டங்களை நடத்தின. குறிப்பாக டெல்லியில் நடந்த போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்தது.
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் டெல்லி நோக்கி வந்தனர். அவர்களை தடுக்க 250க்கும் மேற்பட்ட ரயில்கள் டெல்லிக்குள் நுழைவது ரத்து செய்யப்பட்டது. டெல்லிக்குள் 47க்கும் அதிகமான மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன. ரயில்களில் டெல்லி நோக்கி வந்த இளைஞர்களும், மாணவர்களும் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இருப்பினும் எல்லா தடைகளை மீறி மாணவர்கள் சிலர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். குறிப்பாக டெல்லிக்குள் நுழைய முயன்ற அபிஜித் தீப்கே விமானத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். மற்ற CJP நிர்வாகிகளான சவுரவ் தாஸ் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இன்று காலை டெல்லியின் நிர்வாக நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டிருக்கிறார்.
இருப்பினும் அவர் அடுத்த சில நாட்களுக்கு டெல்லியில் போராட்டத்தை நடத்தக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் தனது x பக்கத்தில் மோடியை விமர்சித்து பதிவிட்டிருக்கிறார். "பிரதமராக மோடி இந்தியாவுக்கு அவமானமாகத் திகழ்கிறார். இவ்வளவு பெரிய கோழையையும், அடாவடித்தனம் செய்பவரையும் இந்த நாடு இதற்கு முன் கண்டதே இல்லை" என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications
