'பெரிய சதி'.. 'அவங்க மேலே கேஸ் போடுங்க'.. பிரதமர் மோடியிடம் கபில் சிபல் வைத்த கோரிக்கை
டெல்லி: தனது இமேஜை கெடுக்க சிலர் ஒப்பந்தம் செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி உள்ளார். ராஜ்யசபா எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல், இது அரசின் ரகசியமாக இருக்க முடியாது என்றும் அப்படி இமேஜை கெடுக்க வேண்டும் செயல்படுபவர்களின் பெயர்களை பிரதமர் மோடி வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் மீது வழக்கு போட வேண்டும் என்றும் கபில்சிபல் வலியுறுத்தி உள்ளார்.
லோக்சபாவில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, பா.ஜ., - காங்., கட்சிகளுக்கு இடையே அரசியல் ரீதியாக பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை ஜெர்மனி கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் சர்வதேச அளவில் சதி செய்யப்படுவதாக, காங்கிரஸ் மீது பாஜக கடும் கோபத்தில் இருக்கிறது.
அதனை வெளிப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி நேற்று காங்கிரஸ் மீது மறைமுகமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்காக "வெளிநாட்டு சக்திகளை காங்கிரஸ் அழைக்கிறது" என்று விமர்சித்தார்.

பிரதமர் மோடி
போபால் - டெல்லி வந்தே பாரத் விரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்து ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, "2014 ஆம் ஆண்டிலிருந்து உறுதியுடன், பகிரங்கமாகப் பேசி தங்கள் உறுதியை வெளிப்படுத்திய சிலர் நம் நாட்டில் உள்ளனர். அவர்கள் மோடியின் (என்) இமேஜை கெடுத்துவிட முயற்சிக்கிறார்கள்.

பாதுகாப்பு கவசம்
இதற்காக, பல்வேறு நபர்களுக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக சிலர் நாட்டிற்குள் அமர்ந்து கொண்டும், சிலர் வெளியில் அமர்ந்து தங்கள் பணியை செய்து வருகின்றனர். ஆனால் ஒவொரு இந்தியரும் எனது பாதுகாப்புக் கவசமாகிவிட்டார்கள். இதனால் மக்களைக் கோபமடையச் செய்வதற்கு புதிய தந்திரங்களைக் கையாளும்படி அவர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள்" இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

வழக்கு தொடரலாம்
மோடியின் கடுமையான கருத்துகளுக்கு பதிலடி கொடுத்த முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவரான கபில் சிபல், ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள், நிறுவனங்கள் அல்லது நாடுகளின் பெயர்களை பிரதமர் மோடி பகிரங்கமாக வெளியிட வேண்டும். இது அரசின் ரகசியமாக இருக்க முடியாது. அவர்கள் மீது வழக்குத் தொடரலாம் என்று கபில் சிபல் கூறினார்.

டிரெய்லர்
2024 பொதுத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் பாஜக வகுப்புவாத வன்முறையை கையில் எடுத்திருப்பதாகவும், மேற்கு வங்கம் மற்றும் குஜராத்தில் சமீபத்திய சம்பவங்கள் வெறும் "டிரெய்லர்" தான் என்றும் கபில் சிபல் குற்றம்சாட்டினார். ராம நவமி பண்டிகையின் போது பல மாநிலங்களில் வன்முறை மற்றும் தீவைப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் கூறினார்.

வெறுப்பு பேச்சு
கபில் சிபல் தனது ட்விட்டர் பக்கத்தில், "2024ஆம் ஆண்டை நெருங்கி வருகிறோம். தேர்தலையொட்டி பாஜக நான்கு திட்டங்களை வைத்துள்ளது. 1) வகுப்புவாத வன்முறை 2) வெறுப்புப் பேச்சு 3) சிறுபான்மையினரை தூண்டிவிடுதல் 4) ED, CBI, தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை குறிவைத்தல் போன்ற 4 திட்டங்களை வைத்திருக்கிறது. வங்காளத்தில் நடந்த தீ வைப்பு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத்தில் வகுப்புவாத வன்முறையைத் தூண்டுவது போன்றவை வெறும் ட்ரெய்லர் தான் என்று கபில் சிபல் கூறினார். கடந்த ஆண்டு மே மாதம் காங்கிரஸில் இருந்து விலகிய கபில் சிபல், சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடன் சுயேச்சை உறுப்பினராக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications