மோடிலை.. அட மோடியை கலாய்க்க ராகுல் உருவாக்கிய புதிய வார்த்தை.. அர்த்தம் தெரிஞ்சா அசந்துடுவீங்க!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மோடியை கலாய்க்கும் விதமாக ஆங்கிலத்தில் புதிய வார்த்தை ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Modilie: மோடிலை: அட மோடியை கலாய்க்க ராகுல் உருவாக்கிய புதிய வார்த்தை- வீடியோ

    டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மோடியை கலாய்க்கும் விதமாக ஆங்கிலத்தில் புதிய வார்த்தை ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.

    கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி செய்த பிரச்சாரம் எல்லாம் நிறைய விமர்சனங்களை சந்தித்து வருகிறது. முக்கியமாக மோடி நிறைய தவறான தகவல்களை, பொய்யான தகவல்களை தெரிவித்து வருவதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது.

    Modilie: Rahul Gandhi creates a new word to tease Modi and his lies

    கடந்த சில நாட்களுக்கு முன் மோடி, மேகங்கள் வழியாக ராணுவ விமானம் செல்லும் போது ரேடாரில் கண்டுபிடிக்க முடியாது. அதனால் மேக மூட்டம் இருந்த மோசமான வானிலையில் இந்திய ராணுவத்தை பாலக்கோட்டில் தாக்குதல் நடத்த சொன்னேன் என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார்.

    அதற்கு அடுத்த பேட்டியில், 1988ல் நான் டிஜிட்டல் கேமராவும், இ மெயிலும் வைத்து இருந்தேன், என்று குறிப்பிட்டார். அப்போது இந்த இரண்டுமே பயன்பாட்டில் கிடையாது. மோடியின் இந்த இரண்டு பேச்சுகளும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த இரண்டு பொய்களும் இணையம் முழுக்க பெரிய அளவில் விவாதத்திற்கு உள்ளானது. உலக அளவில் இந்த இரண்டு பேச்சும் பெரிய சர்ச்சையை சந்தித்துள்ளது. இதை தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வித்தியாசமாக கலாய்த்து இருக்கிறார்.

    அதன்படி ராகுல் காந்தி டிவிட் ஒன்று செய்துள்ளார், அதில் , மோடியை கலாய்க்கும் விதமாக ஆங்கிலத்தில் புதிய வார்த்தை ஒன்றை உருவாக்கி இருக்கிறார். மோடியை கலாய்க்கும் விதமாக modilie என்ற வார்த்தையை உருவாக்கி உள்ளார்.

    அதாவது modi - மோடி, lie - பொய் என்பதை இணைத்து modilie என்ற வார்த்தையை உருவாக்கி உள்ளார். இதற்கு அகராதியில் அர்த்தம் இருப்பதாகவும் அவர் மீம் வெளியிட்டுள்ளார்.

    அதன்படி தொடர்ந்து உண்மையை திரித்து கூறுவதற்கு பெயர்தான் modilie என்று அதில் விளக்கப்பட்டுள்ளது. அதோடு modilie என்ற வார்த்தையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் அதில் விளக்கப்பட்டுள்ளது.

    அவர் ஒரு மோடிலையர், (அவர் ஒரு பொய்யர்), அவர் தொடர்ந்து மோடிலையிங் செய்து இருக்கிறார் (உண்மையை மாற்றி பேசுகிறார்) என்று நிறைய விளக்கங்களை இதில் கொடுத்து இருக்கிறார்கள். ராகுல் காந்தியின் இந்த ஸ்மார்ட் டிவிட் பெரிய வைரலாகி பிரபலமாகி உள்ளது.

    ஆனால் காங்கிரஸ் கட்சி அதோடு விடவில்லை. இதற்காக தனி இணைய பக்கத்தையே தற்போது அக்கட்சி உருவாக்கி உள்ளது. இதுவரை மோடி சொன்ன பொய்களை எல்லாம் அதில் காங்கிரஸ் கட்சி தொகுத்து கட்டுரைகளாக வைத்து உள்ளது. https://www.modilies.in/ என்ற இணைய பக்கத்தில் இந்த கட்டுரைகள் அடங்கி உள்ளது.

    இதில் 2014-2019 வரை மோடி சொன்ன பொய்களை இதில் தேர்வு செய்து படிக்க முடியும். காங்கிரஸ் கட்சிக்கு கடந்த சில நாட்களாக இப்படி வித்தியாசமான ஐடியாக்கள் தோன்றி வருவது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+