டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

10 நாட்களில் 12 நாடுகளுக்கு பரவிய மங்கி பாக்ஸ்.. 90 பேருக்கு பாதிப்பு.. வேகமாக பரவும் வைரஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: 10 நாட்களில் 12 நாடுகளுக்கு மங்கி பாக்ஸ் பரவியுள்ளது. இது அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா உலகம் முழுவதும் பரவியது. இந்த கொரோனா தற்போது 3ஆவது அலை, 4 ஆவது அலை என பரவிக் கொண்டே இருக்கிறது.

நாய் உணவை டேஸ்ட் பார்த்து சொன்னால் ரூ.5 லட்சம்.. சோறு போட்டு கை நிறைய சம்பளமும் கொடுக்கும் நிறுவனம்!நாய் உணவை டேஸ்ட் பார்த்து சொன்னால் ரூ.5 லட்சம்.. சோறு போட்டு கை நிறைய சம்பளமும் கொடுக்கும் நிறுவனம்!

இதை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடப்படுகின்றன. எனினும் கொரோனா அங்கொன்றும் இங்கொன்றுமாக மீண்டும் மீண்டும் தனது வெர்ஷனை மாற்றி தலைதூக்கி கொண்டே வருகிறது.

ஐரோப்பா

ஐரோப்பா

இந்த நிலையில் புதிதாக மங்கிபாக்ஸ் எனும் வைரஸ் தொற்று அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது. உலக சுகாதார அமைப்பு முதல் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா விஞ்ஞானிகள் இந்த புதிய தொற்று பரவலை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

10 நாட்களில் 12 நாடுகள்

10 நாட்களில் 12 நாடுகள்

எனினும் கடந்த 10 நாட்களில் 12 க்கும் அதிகமான நாடுகளில் 90 க்கும் மேற்பட்டோருக்கு மங்கி பாக்ஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே வேளை இந்த தொற்று பாலியல் உறவுகளிலும் அதிலும் குறிப்பாக ஆணுடன் ஆண் பாலியல் உறவு கொள்ளும் போது அதிகம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதார அமைப்பு

இந்த நோய் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு உஷார் நிலை அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுர் மாண்டவியா தேசிய நோய் தடுப்பு மையம் மற்றும் ஐசிஎம்ஆர் ஆகியவற்றை தொடர் கண்காணிப்பில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஸ்பெயின், போர்ச்சுகல், ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் பரவியுள்ளது.

வெளிநாடுகள்

வெளிநாடுகள்

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளை முறையாக கண்காணிக்க மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பொதுவாக வெளிநாட்டு பணிகள் போக்குவரத்து அதிகம் காணப்படும் மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் உஷார் நிலையில் உள்ளன. கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் உரிய கண்காணிப்பு நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சீரம் இன்ஸ்டிடியூட்

சீரம் இன்ஸ்டிடியூட்

1958 ஆம் ஆண்டு கோபன்ஹேகனில் உள்ள ஒரு சீரம் இன்ஸ்டிடியூட்டில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்குகளிடையே பரவியிருந்தது. குரங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாலேயே இதற்கு மங்கிபாக்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. பெரியம்மையை போல் இதுவும் ஒரு அம்மை நோயாகும். உடலில் கொப்புளங்கள் போல் எழும்புகின்றன.

தடுப்பூசி

தடுப்பூசி


இந்தியாவில் இதுவரை யாருக்கும் மங்கிபாக்ஸ் இருப்பது கண்டறியப்படவில்லை. 1980 ஆம் ஆண்டு முதல் சின்னம்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதாக கூறும் உலக சுகாதார நிறுவனம், மங்கிபாக்ஸ் மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் பாதித்தால் காய்ச்சல், தலை வரி, உடல் வலி ஏற்படும். இந்த நோய்க்கு எந்த சிகிச்சையும் இல்லை. ஆனால் சின்னம்மைக்கான தடுப்பூசி மங்கி பாக்ஸிற்கு எதிராக செயல்படுகிறது.

English summary
Monkey pox spread in 12 countries in just 10 days. 90 more were affected for this virus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X