மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி.. ’முத்ரா யோஜனா திட்டம்’ பற்றி பிரதமர் மோடி தமிழில் ட்வீட்
டெல்லி: முத்ரா திட்டம் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகும், இது கோடிக் கணக்கானவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது மற்றும் தொழில்முனைவோரை வளர்க்கிறது என்று பிரதமர் மோடி தமிழில் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
முத்ரா யோஜனா திட்டம், கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைத்தார். யாருக்கெல்லாம் தொழில் தொடங்க விருப்பமோ அவர்களுக்கு மத்திய அரசு நிதியுதவியை வழங்குவதுதான் முத்ரா திட்டம். அந்த வகையில், கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் வரை இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறலாம். மத்திய அரசு இந்த கடன் உதவியை பொதுமக்களுக்கு வழங்க காரணம், வேலைவாய்ப்பு இன்மையை இந்தியாவிலிருந்து நீக்கும் நோக்கத்தில்தான்.

அது மட்டுமல்ல, சாமான்ய மக்களும் தொழில் முனைவோராக உயரலாம்.. அத்துடன், சிறு வணிகர்களும் தங்களது நிதி தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு, தங்கள் தொழிலையும் விரிவுபடுத்தி கொள்ளலாம். மொத்தம் 3 வகைகளில், இந்த திட்டத்தின்கீழ் கடன் வழங்கப்படுகிறது. இந்த 3 வகைகளிலுமே வேறு வேறு கடன் வசதிகள் இருக்கின்றன. குறிப்பாக, "சிஷு" (Shishu) என்ற திட்டத்தின் கீழ் ரூ.50,000 வரையில் கடன் தரப்படுகிறது.
"கிஷோர்" என்ற திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையும், "தருண்" என்ற திட்டத்தின் மூலம், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், 44 கோடிக்கும் மேலான பிணையமில்லா முத்ரா யோஜனா கடன்கள் கோடிக்கணக்கான தொழில்முனைவோரை மேம்படுத்தியுள்ளன, இவர்களில் 70 சதவீதமானவர்கள் பெண்கள். வேலை தேடுபவர்கள் இப்போது வேலையை உருவாக்குகிறார்கள்.
இது மோடியின் உத்தரவாதம் என பாஜக தனது சமூக வலைத்தள பக்கங்களில் கூறியிருந்தது. இந்த எக்ஸ் தள பதிவுக்கு பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- முத்ரா திட்டம் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகும், இது கோடிக்கணக்கானவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது மற்றும் தொழில்முனைவோரை வளர்க்கிறது. அதிக எண்ணிக்கையிலான பயனாளிகள் பெண்கள், எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினர் என்பது குறிப்பிடத்தக்கது" என்று கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications