“நாட்டு நாட்டு”.. ஆஸ்கரை தொடர்ந்து குடியரசு தலைவரிடம் பத்மஸ்ரீ விருது பெற்றார் இசையமைப்பாளர் கீரவாணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருதை வென்ற இசையமைப்பாளர் கீரவாணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்து உள்ளார். உலகின் தலைசிறந்த கோல்டன் குளோப், ஆஸ்கர் போன்ற விருதுகளின் வரிசையில் இந்தியாவின் கௌரவம் மிக்க பத்மஸ்ரீ விருதினை பெற்று இருக்கிறார் கீரவாணி.

இந்திய அரசின் கௌரவம் மிக்க விருதுகளாக பத்ம விருதுகள் கருதப்படுகின்றன. பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய 3 விருதுகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கவுரப்படுத்தும் வகையில் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கலை, சமூக சேவை, பொதுப்பணி, அறிவியல், பொறியியல், வணிகம், தொழிற்துறை, மருத்துவம், இலக்கிய, விளையாட்டு, ராணுவம், கல்வி உள்ளிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு 100 ஆண்டுகளுக்கும் மேலாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா,
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.

Musician Keeravani received Padma Shri Award from the President Draupati Murmu

முலாயம் சிங் யாதவுக்கு பத்ம விபூஷன்

இந்த நிகழ்வில் மிக உயரிய விருதான பத்ம விபூஷன் விருது 3 பேருக்கும், அதற்கு அடுத்த இடத்தில் உள்ள பத்ம பூஷன் விருது 4 பேருக்கும், பத்மஸ்ரீ விருதுகள் 47 பேருக்கும் வழங்கப்பட்டன. அதில் குறிப்பாக மறைந்த சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் முலாயம் சிங் யாதவ் காலமான நிலையில் அவர் சார்பாக அவரது மகனும், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் அந்த விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் பெற்றுக் கொண்டார்.

சுதா மூர்த்திக்கு பத்ம பூஷன்

அதேபோல் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும் பிரபல எழுத்தாளருமான சுதா மூர்த்திக்கு, அவரது சமூக சேவைகளை பாராட்டி பத்ம பூஷன் விருதை வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கவுரவித்தார். அதேபோல் கல்வியாளரும், சூப்பர் 30 என்ற பயிற்சி திட்டத்தின் நிறுவனருமான ஆனந்த் குமாருக்கு குடியரசுத் தலைவர் பத்ம ஸ்ரீ விருதை வழங்கினார். அதேபோல் பௌத்த மத குருவும், தீக்‌ஷே மேனாஸ்டெரி தலைவருமான குஷோக் திக்‌ஷே நவாங் சம்பா ஸ்டான் ஜின் பத்மஸ்ரீ விருதை பெற்றுக் கொண்டார்.

கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது

மணிப்பூர் மாநில முன்னாள் துணை முதலமைச்சர் தனோஜன் சவுபா சிங்கிற்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்மஸ்ரீ விருதை வழங்கினார். அதேபோல் ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் வெளியான நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருதை வென்ற இசையமைப்பாளர் கீரவாணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்து உள்ளார். உலகின் தலைசிறந்த கோல்டன் குளோப், ஆஸ்கர் போன்ற விருதுகளின் வரிசையில் இந்தியாவின் கௌரவம் மிக்க பத்மஸ்ரீ விருதினை தற்போது பெற்று இருக்கிறார் கீரவாணி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+