அதிகாலை வானத்தில் தெரிந்த அதிசயம்.. ஆச்சரியமாக பார்த்த மக்கள்! வாழ்நாளில் ஒரு முறைதான் தெரியுமாம்
டெல்லி: இன்று அதிகாலை டெல்லி மக்கள் வானத்தை பார்த்து ஆச்சரியமடைந்திருக்கின்றனர். தீப்பிழம்பு போன்ற கோடுகள் வானத்தில் தெரியவே, அது என்னவென்று புரியாமல் குழம்பியிருக்கின்றனர்.
இன்று அதிகாலை டெல்லியில் மக்கள் வாக்கிங் போகும்போது, வானம் வழக்கத்துக்கு மாறாக இருந்ததை கவனித்திருக்கின்றனர். அடிவானத்தில் செஞ்சிவப்பாக சூரியன் உதிப்பதற்கு முன்னதாக வெளிச்சம் வருவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் மேல் வானத்தில் தீப்பிழம்பு போல கோடுகள் இருந்தது டெல்லி மக்களை ஆச்சரியப்படுத்தி இருந்தது.

இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் சோசியல் மீடியாக்களின் பரவலாக ஷேராகி வருகின்றன. பலரும் இதனை வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே காணக்கூடிய அதிசயம் என்று வர்ணித்துள்ளனர். ஆனால் இந்த தீப்பிழம்பு ஒரு சில வினாடிகள் மட்டுமே தெரிந்தது இருப்பினும் நகரத்தின் விளக்கு வெளிச்சத்தை மீறி பிரகாசமாக இருந்திருக்கிறது. ஹாலிவுட் படங்களில் காட்டுவதைப் போல வேற்று கிரக ஏலியன்கள் ஏதேனும் பூமியை நோக்கி வருகிறதோ? என்று சிலர் இந்த படங்களை பகிர்ந்து சோசியல் மீடியாக்களில் கேள்வி எழுப்பியிருந்தனர்.
"இது மிகப்பெரிய விண்கல்லாக இருக்கலாம். பூமிக்குள் நுழையும் போது சுக்கு நூறாக உடைந்து வளிமண்டலத்தில் உரசி தீப்பிடித்து எரிந்து இருக்கலாம். அதனால் தோன்றிய வெளிச்சமாக இருக்கலாம்" என்று வானியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். செப்டம்பர் மாதம் வழக்கமாக விண்கற்கள் அதிக அளவில் பூமியை தாக்குவதுண்டு.
New Delhi witnessed a spectacular celestial event on Friday night when bright debris lit up the skies, leaving residents in awe and sparking a wave of excitement online.pic.twitter.com/FCxk1kWFXD
— Massimo (@Rainmaker1973) September 20, 2025
இதனை விண்கல் மழை என்றும் விஞ்ஞானிகள் கூறுவார்கள். இப்படி வரும் விண்கற்கள் மிகவும் சிறியதாக இருக்கும் என்பதால், வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜனுடன் உரசி தீப்பிடித்து எரிந்து விடும். ஆனால் பூமியில் இருந்து பார்ப்பதற்கு வான வேடிக்கை போல தெரியும்.
இந்த நிகழ்வுகளில், பெரிய சைஸ் விண்கல் ஏதாவது விழும்போது இப்படி தீப்பிழம்பு போல தெரியும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். விண்கற்கள் பூமிக்கு மிகவும் ஆபத்தானவை. அவை சைஸில் சிறியதாக இருக்கும் வரை பிரச்சனை கிடையாது. சில நூறு மீட்டர் விட்டம் கொண்ட விண்கற்கள் கூட பூமியில் மனிதர்களை அழிப்பதற்கு போதுமானதாகும். பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய விண்கல் ஒன்று தாக்கிதான் டைனோசர் இனமே முற்றிலுமாக அழிந்தது என்று நினைவில் கொள்ளத்தக்கது.












Click it and Unblock the Notifications