பிரதமர் நரேந்திர மோடி ராஜினாமா! ஜனாதிபதியிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்!
டெல்லி: நரேந்திர மோடி பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் ஜனாதிபதியை சந்தித்த நரேந்திர மோடி ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். இதனை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார்.
லோக்சபா தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களை எந்தக் கட்சியும் பெறவில்லை. ஆனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களைப் பெற்றுள்ளது. இதேபோல இந்தியா கூட்டணியும் சில கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையைப் பெற முயற்சித்து வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் பிரதமர் பதவியில் இருந்து விலகும் ராஜினாமா கடிதத்தை முறைப்படி நரேந்திர மோடி கொடுத்தார். மேலும் மத்திய அமைச்சரவையின் ராஜினாமா, 17-வது லோக்சபாவை கலைக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின் பரிந்துரையையும் ஜனாதிபதியிடம் கொடுத்தார் நரேந்திர மோடி.
நரேந்திர மோடி, அமைச்சரவையின் ராஜினாமாக்களையும் லோக்சபாவை கலைக்கும் பரிந்துரையையும் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார். மேலும் புதிய அரசு பதவி ஏற்கும் வரை இடைக்கால பிரதமராக நரேந்திர மோடி நீடிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி திரவுபதி முர்மு கேட்டுக் கொண்டார். இதனை நரேந்திர மோடியும் ஏற்றுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications