பாகிஸ்தானை மண்ணை கவ்வ வைக்க 7 அல்லது 10 நாட்கள் போதும்.. அதற்கு மேல் வேண்டாம்.. மோடி ஆவேசம்
Recommended Video
டெல்லி: பாகிஸ்தானை ஒரு வாரத்தில் மண்ணை கவ்வ வைக்க முடியும் என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
டெல்லியில் பிரதமரின் தேசிய மாணவர் படையின் ஆண்டு பேரணி நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் 45 நிமிடங்கள் பேசினார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே காஷ்மீரில் பிரச்சினை நிலவி வருகிறது.
சில குடும்பங்களும், அரசியல் கட்சிகளும் பிரச்சினைகளை உயிர்ப்புடன் வைத்திருந்தன. அதனால் அங்கு தீவிரவாதம் செழித்து மேலோங்கியது. ஆனால் பல்லாண்டு காலமாக இந்த நாட்டை பிடித்துள்ள பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு முயன்று வருகிறது.

நாட்டின் பிற பகுதிகள்
தற்போது காஷ்மீர் மட்டுமின்றி நாட்டின் பிற பகுதிகளும் அமைதியாக இருக்கின்றன. வடகிழக்கு மாநிலத்தவர்களின் உணர்வுகள் பல்லாண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்தன. அவர்களின் உணர்வுகளை பூர்த்தி செய்துள்ளோம். போடாலாந்து தேசிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட 3 அமைப்புகளுடன் மத்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது.

நாட்டினர்
இந்தியாவிடம் 3 போர்களில் பாகிஸ்தான் தோல்வி அடைந்துவிட்டது. எனினும் இந்தியாவுடன் மறைமுகமாத போரில் ஈடுபட்டுத்தான் வருகிறது. முந்தைய அரசுகள், வெறும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையாக பார்த்தன. ஏதாவது நடவடிக்கை எடுக்க அனுமதி தருமாறு நமது ராணுவம் கேட்டால் கூட அவர்கள் அனுமதி அளிப்பதில்லை.

இந்தியாவுக்கு
ஆனால் பாகிஸ்தானை மண்ணை கவ்வ வைக்க இந்திய ராணுவத்தினருக்கு ஒரு வாரமோ 10 நாட்களோதான் தேவைப்படும். அதற்கு மேல் தேவைப்படாது. சர்ஜிக்கல் ஸ்டிரைக், வான் வழித் தாக்குதல் மூலம் தீவிரவாதிகளின் சொந்த இடத்திலேயே நாம் பாடம் கற்பித்துள்ளோம். இந்த இரு தாக்குதல்களுக்கு பின்னர் பாகிஸ்தானின் நடத்தையில் மாற்றங்கள் தெரிந்தன. சுதந்திரம் அடைந்த போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக வாழ்ந்து வந்தவர்கள் தேவைப்பட்டால் இந்தியாவுக்கு வரலாம் என அழைப்பு விடுக்கப்பட்டது.

நீண்ட நாள்
இது தொடர்பாக இந்திய பிரதமர் நேருவுக்கும் பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகானுக்கும் இடையே 1950 இல் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. எனவே இந்தியாவின் நீண்ட நாள் வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றி வருகிறோம். மேற்கண்ட நாடுகளில் மதம் காரணமாக மக்கள் துன்புறுத்தப்பட்டார்கள். அவ்வாறு துன்புறுத்தப்பட்டவர்களுக்கு அடைக்கலம் தருவது இந்தியாவின் கடமையாகும் என தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. பிப்ரவரி 26-ஆம் தேதி வந்தால் புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் வான் வழியாக நாம் தாக்குதல் நடத்தி ஓராண்டு ஆக போகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications