1962-க்குப் பின் தொடர்ந்து 3-வது முறையாக 'ஆளும் கட்சி' அரசு.. நாளை ஆட்சி அமைக்க உரிமை கோரும் மோடி!
டெல்லி: 1962-ம் ஆண்டுக்குப் பிறகு மத்தியில் ஆளும் கட்சி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறது. ஜனாதிபதி திரவுபதி முர்முவை நாளை சந்தித்து மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி புதிய ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் பிரதமர் மோடி.
லோக்சபா தேர்தலில் பாஜக 240 இடங்களில் மட்டும் வென்றது. மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் 272. பாஜகவால் தனித்து 272 இடங்களைப் பெற முடியாமல் போனாலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மைக்கு அதிகமான இடங்கள் உள்ளன; சுயேட்சை எம்பிக்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக தலைவர்கள், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜேடியூ தலைவர் நிதிஷ்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் பாஜக எம்பிக்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பாஜக நாடாளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்படுகிறார்.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் தலைவர்களின் ஆதரவு கடிதத்துடன் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்திக்கிறார் நரேந்திர மோடி. இந்த ஆதரவு கடிதங்களைக் கொடுத்து மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோர இருக்கிறார் நரேந்திர மோடி.
நாட்டின் முதல் பொதுத் தேர்தல் 1952-ல் நடைபெற்றது. 1962-ம் ஆண்டு வரை மத்தியில் ஆளும் கட்சிதான் அடுத்தடுத்து தொடர்ந்து 3 முறை புதிய ஆட்சியை அமைத்தது. தற்போது அதே வரலாறு திரும்பியுள்ளது. 2014-ம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் பாஜக ஆட்சி அமைத்தது. 2019 தேர்தலிலும் வென்று பாஜக ஆட்சியே அமைந்தது. தற்போது 3-வது முறையாக மத்தியில் ஆளும் கட்சியே புதிய ஆட்சியை அமைக்க இருக்கிறது. இதனை பிரதமர் மோடி, பாஜகவினருக்கு நன்றி தெரிவிக்கும் உரையில் சுட்டிக்காட்டியும் இருந்தார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications