வெப்பநிலை அதிகரிப்பு.. தமிழகத்தில் இந்த 2 நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் அபாயம்.. நாசா பகீர் வார்னிங்!
டெல்லி: வளரும் நாடுகளுக்கும் சரி, வளர்ந்த நாடுகளுக்கும் சரி பருவநிலை மாற்றம் மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. இதனால் சராசரி வெப்பநிலை அதிகளவு உயர்ந்து மிகப்பெரும் பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.
Recommended Video
கடல்நீர் மட்டம் உயருதல், பனிப்பாறைகள் உருகுதல், சுனாமி, புயல், வெள்ளம், வறட்சி ஆகியவற்றுக்கு பருவநிலை மாற்றம்தான் மிகபெரும் காரணமாகும். குறிப்பாக பருவநிலை மாற்றம் காரணமாக இந்த பூமிப்பந்தின் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மனிதர்கள்தான் காரணம்
பருவநிலை மாற்றத்துக்கு முழுக்க, முழுக்க காரணம் மனிதர்கள்தான். பூமியின் நிலப்பரப்பில் இருந்து தொழிற்சாலைகள் கரிமில வாயுவை அதிகரித்து வெப்பநிலை உயர காரணமாகின்றன. இதேபோல் மனிதர்கள் காடுகளை அழிப்பதால் அதிகளவு கார்பனும் வெளியிடப்பட்டு புவி வெப்பமயமாதலுக்கு காரணமாகிறது. அதாவது உலகத்தில் தொழில் வளர்ச்சி தோன்றுவதற்கு முன்பு இருந்ததை விட தற்போது 30% அதிகமாக கரியமில வாயுவின் அளவு அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் அதிர்ச்சி கொடுக்கின்றன..

பூமியின் வெப்பநிலை உயரும்
இந்த பூமியை மனிதர்கள் தங்கள் சுயநலத்துக்காக ஆட்டி வைத்து கொண்டிருக்கிறார்கள் என்ற மிகப்பெரும் அதிர்ச்சியை நமது அளிக்கிறது ஐபிசிசி எனப்படும் பருவநிலை மாற்றம் தொடர்பான நாடுகளுக்கு இடையேயான குழு. அதாவது அடுத்த 10 ஆண்டுகளுக்குள் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்கும் என்று அதிர்ச்சிகரமாக தெரிவித்துள்ளது. வெப்ப நிலை உயர்வால் நாம் முன்பே கூறியபடி வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு, கடல் நீர்மட்டம் உயருதல், பனிப்பாறைகள் வேகமாக உருகுதல் உள்ளிட்ட விளைவுகளை மனித குலம் சந்திக்கும் என்று ஐபிசிசி மிக தெளிவாக அறிக்கையில் கூறியுள்ளது.

இந்தியாவுக்கு அதிர்ச்சி
இதில் குறிப்பிட்டத்தக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அமெரிக்க, ஆபிரிக்க, ஐரோப்பிய நாடுகளை விட ஆசிய நாடுகளின் கடல்நீர்மட்டம் வேகமாக அதிகரிக்கும் என்று அதிர்ச்சி குண்டை தூக்கி வீசியுள்ளது. இந்த ஐபிசிசி அறிக்கையை அடிப்படையாக வைத்து இந்தியாவுக்கு மிகப்பெரும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா. 2,100-ம் ஆண்டுக்குள் 12 கடலோர இந்திய நகரங்கள் நீருக்குள் மூழ்கும் ஆபத்து உள்ளது என எச்சரித்துள்ளது .

சென்னை, தூத்துக்குடி
2100-ம் ஆண்டுக்குள் 12 இந்திய நகரங்கள் சுமார் 2.7 மீட்டர் ஆழத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறது நாசா. குஜராத், ஒடிசா, கல்கத்தா, மகாராஷ்டிரா,கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களின் நகரங்கள் உள்ள இந்த பட்டியலில் நமது தமிழ்நாடும் இணைந்து இருப்பதுதான் வேதனையின் உச்சம். தமிழ்நாட்டில் சிங்கார சென்னை, தூத்துக்குடி ஆகிய நகரங்கள் கடல் நீரில் மூழ்கும் அபாயத்தில் இருப்பததாக நாசா கூறியுள்ளது.

கேரளா, குஜராத்
2100-ம் ஆண்டில் சென்னை 1.87 அடியும், தூத்துக்குடியில் 1.9 அடிக்கு கடல்நீர்மட்டம் உயரும் என்று எச்சரிக்கை மணி அடித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கண்ட்லா, ஒக்ஹா மற்றும் பவுநகர், மகாஷ்டிரா தலைநகர் மும்பை, கோவா மோர்முகாவ், கர்நாடகாவின் மங்களூரு, ஆந்திராவின் விசாகப்பட்டினம்,
ஒடிசாவின் பரதீப், கொல்கத்தாவின் கிதிர்பூ மற்றும் கேரள மாநிலம் கொச்சி ஆகியவை 2100-ம் ஆண்டில் நீரில் மூழ்கி காணாமல் போகும் என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக நாடுகளுக்கு அறிவுரை
இந்த பூமியின் சுற்றுச்சூழலுக்கு மனித குலம் ஏற்படுத்திய கெடுதலே இந்த எதிர்கால விளைவுகளுக்கு எல்லாம் காரணம் என்று நாசா தெள்ளத் தெளிவாக கூறியுள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகளை உடனடியாக களைய வேண்டியது அவசியம் என்றும் உலக நாடுகளுக்கு நாசா அறிவுறுத்தி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications