காங். அலுவலகம், சோனியா வீடு முன்பு திடீர் என போலீஸ் குவிப்பு- நாடாளுமன்றத்தை முடக்கும் எம்.பி.க்கள்
டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம், சோனியா காந்தியின் வீடு உள்ளிட்டவைகள் முன்பாக நேற்று திடீரென பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. டெல்லி போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து இன்று நாடாளுமன்றத்தில் இவ்விவகாரத்தை காங்கிரஸ் எம்.பிக்கள் எழுப்ப உள்ளனர்.
Recommended Video
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகளை யங்க் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றியதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது என்பது அமலாக்கத்துறை வழக்கு. இதனையடுத்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தினர்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டாகப் போராட்டம் நடத்தினர். மேலும் நாட்டின் பல மாநிலங்களில், சோனியா-ராகுலிடம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டமும் நடத்தினர்.
இதன்பின்னர் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தலைமை அலுவலகத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில் நேற்று திடீரென நேஷனல் ஹெரால்டு அலுவலகம், யங் இந்தியா அலுவலகம் ஆகியவற்றை போலீசார் சீல் வைத்தனர். அத்துடன் காங்கிரஸ் கட்சி தலைமை அலுலகம், சோனியா காந்தி வீடு ஆகியவை முன்பாக பெரும் எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். முன்னெச்சரிக்கையாகத்தான் போலீசார் குவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனால் சோனியா, ராகுல் காந்தி கைது செய்யப்படுவார்களோ? என்கிற கேள்வியும் எழுந்தது. இதனையடுத்து டெல்லியில் காங்கிரஸ் எம்.பிக்கள் உடனடியாக ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். மேலும் கர்நாடகா பயணத்தை நிறைவு செய்துவிட்டு நேற்று இரவு 10.30 மணியளவில் ராகுல் காந்தி டெல்லி திரும்பினார்.
இந்நிலையில் இன்று காலை டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளனர். அத்துடன் சோனியா காந்தி வீடு, கட்சி தலைமை அலுவலகம் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டு பதற்றம் ஏற்படுத்தப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்ப காங்கிரஸ் எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications