டெல்லியில் பள்ளி மாணவி பலாத்காரம்! சாட்டையை சுழற்றிய மனித உரிமைகள் ஆணையம்.. விளக்கம் கேட்டு நோட்டீஸ்

மாணவியின் உடல்நலத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களை கண்டு தாய் தீவிரமாக விசாரித்ததில் சிறுமி இந்த உண்மையை கூறியுள்ளார். மேலும், இதனை வெளியில் சொன்னால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தான் மிரட்டப்பட்டதையும் அவர் கூறிய

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் மாநகராட்சி பள்ளி ஒன்றில் பயின்று வந்த 3ம் வகுப்பு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், டெல்லி தலைமை செயலாளர் மற்றும் காவல் ஆணையருக்கு விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

டெல்லி மாநகராட்சியில் பயின்று வந்த மூன்றாம் வகுப்பு சிறுமியின் உடல் நிலையில் திடீரென பல மாற்றங்கள் தெரிந்தன. சரியாக சாப்பிடாமலும், தனிமையில் அதிகம் இருக்கவும் சிறுமி விரும்பியுள்ளார். இதனை உணர்ந்த தாய் சிறுமியிடம் தொடர்ந்து விசாரித்ததில் பள்ளியின் விளையாட்டு ஆசிரியரால் சிறுமி பலமுறை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து உடனடியாக காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், விளையாட்டு ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு நாள் ஆசிரியர் சிறுமியை தனியாக அவரது அறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதன் பின்னர் இது வழக்கமாக தொடர்ந்திருக்கிறது. இதனால் சிறுமி உடல் எடை திடீரென குறைந்திருக்கிறது. இந்த மாற்றங்களை உணர்ந்த தாய் விசாரித்தில்தான் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நோட்டீஸ்

நோட்டீஸ்

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து 4 வாரங்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று டெல்லி காவல் ஆணையர் மற்றும், தலைமை செயலாளருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை, விசாரணையின் தற்போதைய நிலை மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வழங்கப்பட்ட ஆலோசனை என்னென்ன என்பது குறித்து விரிவாக குறிப்பிட வேண்டும் என்று நோட்டிசில் மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது. பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை தானாக முன் வந்து எடுத்திருப்பதாக ஆணையம் கூறியுள்ளது.

விளக்கம்

விளக்கம்

இந்த செய்தி உண்மையாக இருப்பின் இது குறித்து கடுமையான பிரச்னையை எழுப்பவும் ஆணையம் தயங்காது என கூறியிருக்கிறது. இதற்கு முன்னர் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருந்த ஆணையம், "ஆசிரியர்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இவர்கள் மாணவர்களின் உண்மையான பாதுகாவலர்களாகவும் வழிக்காட்டியாகவும் கருதப்படுகிறார்கள். ஆனால் இந்த பாலியல் பலாத்கார சம்பவம் ஆசிரியர் மீதான மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்துவதாக இருக்கிறது. எனவே மீண்டும் இது போன்ற குற்றம் நடைபெறாமல் இருக்கும் வண்ணம் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனித உரிமை மீறல்

மனித உரிமை மீறல்

இது அப்பட்டமான மனித உரிமை மீறல். இம்மாதிரியான செயல்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குகின்றன. இம்மாதிரியான நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறியுள்ளது. தலைநகர் டெல்லியில் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையை மாற்ற குழந்தைகள் மற்றும் பெண்கள் குறித்த புரிதல்கள் விரிவாக்கப்பட வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் கூறியுள்ளன.

தீர்வு

தீர்வு

விளம்பரங்கள் தொடங்கி திரைப்படங்கள், புதினங்கள் வரை பெண்கள் குறித்த தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக மகளிர் அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. இதனை மாற்றும்போதும், பாலியல் கல்வியை ஆழமாக அனைவர் மத்தியிலும் கொண்டு செல்லும்போதும்தான் இந்த நிலைமை மாறும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+