விடுபட்ட முகலாயர் வரலாறு.. வெடித்த சர்ச்சைகள்.. பாடத்திட்டத்தில் திருத்தமா?.. என்சிஇஆர்டி விளக்கம்
டெல்லி: சமீபத்தில் சிபிஎஸ்ஸியின் பாட திட்டம் மாற்றப்பட்டதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக முகலாயர்களின் வரலாறு புதிய பாட திட்டத்தில் நீக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை வெடித்தது. இதற்கு என்சிஇஆர்டி இயக்குநர் பிரசாத் சக்லாணி விளக்கமளித்துள்ளார்.
புதிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் சிபிஎஸ்சி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே இந்த புதிய பாடத்திட்டத்திற்கு தயாராக வேண்டும் எனவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3 முதல் 8 வயது மாணவர்களுக்கான அதாவது நர்சரி வகுப்பு முதல் 2ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில்தான் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் புதிய பாட திட்டத்தில் முகலாயர்களின் வரலாறு விடுபட்டுள்ளது என்று சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. நாடு முழுவதும் இது பெரும் விவாதமாக எழுந்தது. இந்நிலையில், தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் இயக்குநர் பிரசாத் சக்லாணி விளக்கமளித்திருக்கிறார். அதாவது, "எந்த பாடத்திட்டமும் வேண்டும் என்றே நாங்கள் விட வில்லை. ஏற்கெனவே இருப்பது ரிப்பிட் ஆக கூடாது என்றுதான் சில பகுதிகளை நீக்கியிருக்கிறோம். இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. வரலாறு பாடம் மட்டும் அல்லாது அறிவியல் பாடத்திலும் சில பகுதிகளை நாங்கள் நீக்கியிருக்கிறோம்.
இதில் எந்த அரசியல் சார்பு நிலையும் கிடையாது. ஒவ்வொரு முறையும் இதுபோல பாட திட்டங்கள் மாற்றியமைக்கப்படும்போது அது அரசியலாக்கப்படுகிறது. ஆனால் இந்த முறை அப்படி எதுவும் ஆகக்கூடாது என்று நினைத்தோம். கொரோனா பாதிப்பையடுத்து மாணவர்களுக்கு இருக்கும் அழுத்தத்தை குறைக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications