Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவில் தினசரி 82 கொலைகள், 264 கடத்தல் சம்பவங்கள்.. எந்த மாநிலம் மிக மோசம் தெரியுமா! பகீர் தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 2021இல் இந்தியாவில் நடந்த குற்றச் சம்பவங்கள் குறித்த டேட்டாக்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டு உள்ளது.

இந்தியாவில் நாடு முழுவதும் தினசரி பல கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அரங்கேறுகிறது. இது தொடர்பான தரவுகள் அனைத்தும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் சேகரிக்கப்படும்.

இந்த தரவுகளைத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த 2021ஆம் ஆண்டின் குற்றங்கள் குறித்த தரவுகளைத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது.

 குற்றச் சம்பவங்கள்

குற்றச் சம்பவங்கள்

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 82 பேர் கொலை செய்யப்படுகின்றனர். மக்கள் தொகை அடிப்படையில் கொலை சம்பவங்கள் (ஒரு லட்சம் பேருக்கு எத்தனை கொலைகள்) அதிகபட்சமாக ஜார்கண்ட் மாநிலத்தில் அதிகமாக நடைபெறுகிறது. அதேபோல ஒரு மணி நேரத்திற்கு 11 கடத்தல் சம்பவங்கள் அரங்கேறுகிறது. அதாவது ஒரு நாளுக்கு 264 கடத்தல் சம்பவங்கள் அரங்கேறுகிறது. கடத்தல் சம்பவங்கள் டெல்லியில் தான் அதிகம் நடக்கிறது.

கொலைகள்

கொலைகள்

2021ஆம் ஆண்டில் மொத்தம் 29,272 கொலை சம்பவங்களும் அரங்கேறி உள்ளது. இதில் மொத்தம் 30,132 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இது 2020ஆம் ஆண்டை விட 0.3 சதவீதம் (29,193 கொலை சம்பவங்கள்) அதிகம் ஆகும். கடந்த 2021இல் 1,01,707 கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. அதில் 1,04,149 பேர் கடத்தப்பட்டு உள்ளனர். இது கடந்த 2021இல் பதிவானதை விட 19.9% (84,805 வழக்குகள்) அதிகமாகும்.

 மர்டர் ரேட்

மர்டர் ரேட்

மர்டர் ரேட் எனப்படும் மக்கள் தொகை அடிப்படையில் அதிகம் கொலை சம்பவங்கள் நடப்பது ஜார்கண்ட் மாநிலத்தில் தான். அதேநேரம் எண்ணிக்கை அடிப்படையில் உத்தரப் பிரதேசத்தில் தான் அதிக கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் உத்தரப் பிரதேசம் (3,717 கொலை சம்பவங்கள், 3,825 பேர்), பீகார் (2,799 கொலை சம்பவங்கள், 2,826 பேர்), மகாராஷ்டிரா (2,330 கொலை சம்பவங்கள், 2,381 பேர்), மத்தியப் பிரதேசம் (2,034 கொலை சம்பவங்கள், 2075 பேர்) மற்றும் மேற்கு வங்கம் (1,884 கொலை சம்பவங்கள், 1,919 பேர்) முதல் 5 இடங்களில் உள்ளன.

காரணங்கள்

காரணங்கள்

தலைநகர் டெல்லியில் 459 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் 478 பேர் கொல்லப்பட்டனர். இரு தரப்பிற்கும் இடையே ஏற்படும் தகராறு காரணமாக 9765 கொலைகள் நடந்துள்ளன. 'தனிப்பட்ட பழிவாங்கல் அல்லது பகை காரணமாக 3,782 கொலைகளும் ஆதாயத்திற்காக 1,692 கொலைகளும் நடந்துள்ளன. அதேநேரம் கொலை விகிதங்களை பொறுத்தவரை (ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு) ஜார்க்கண்டில் 4.1 (1,573 கொலைகள், 1,606 பேர்) மோசமாக உள்ளது, அதைத் தொடர்ந்து அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் 4 (16 கொலைகள் 18 பேர்) உள்ளது. தலைநகர் டெல்லியில் கொலை விகிதம் 2.2 ஆக உள்ளது.

 கடத்தல்

கடத்தல்

கடத்தல் சம்பவங்களைப் பொறுத்தவரை 69,014 குழந்தைகள் (10,956 சிறுவர்கள் மற்றும் 58,058 சிறுமிகள்) மற்றும் 35,135 இளைஞர்கள் (6,649 ஆண், 28,485 பெண் மற்றும் ஒரு திருநங்கை) கடத்தப்பட்டு உள்ளனர். அவர்களில் 99,680 பேர் (17,477 ஆண், 82,202 பெண் மற்றும் ஒரு திருநங்கை) மீட்கப்பட்டனர், அவர்களில் 98,860 பேர் உயிருடனும் 820 பேர் இறந்த நிலையிலும் மீட்கப்பட்டனர்.

 டாப் மாநிலங்கள்

டாப் மாநிலங்கள்

கடத்தல் சம்பவங்களைப் பொறுத்தவரை உத்தரப் பிரதேசம் (14,554 சம்பவங்கள், 14,714 பேர்), பீகார் (10,198 சம்பவங்கள், 2,826 பேர்), மகாராஷ்டிரா (10,502 சம்பவங்கள், 10,680 பேர்), மத்தியப் பிரதேசம் (2,034 சம்பவங்கள், 2075 பேர்) மற்றும் மேற்கு வங்காளம் (1,884 சம்பவங்கள், 1,919 பேர்) கடத்தப்பட்டு உள்ளனர். தலைநகர் டெல்லியில் 5,527 கேஸ்களில் 5,888 பேர் கடத்தப்பட்டு உள்ளனர்,

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+