என்டிஏ VS இந்தியா.. தமிழகம் உள்பட 18 மாநில லோக்சபா தேர்தல் வெல்வது யார்?இதோ கருத்து கணிப்பு முடிவு
டெல்லி: அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கனா கேரளா உள்பட 18 மாநிலங் நாடாளுமன்ற தேர்தலில் வெல்வது யார்? என்பது குறித்து நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. இதற்காக பாஜக தனது தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை அமைத்து பணிகளை தொடங்கி உள்ளது.
அதேவேளையில் பாஜகவை வீழ்த்தி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்கும் நோக்கத்தில் காங்கிரஸ், ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்பட 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' என்ற பெயரில் கூட்டணியை அமைத்துள்ளன.

‛இந்தியா' கூட்டணியின் 3 ஆலோசனை கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. மாநிலங்கள் வாரியாக தொகுதிகளை பங்கீடும் பணி இனி தொடங்க உள்ளது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் பணி தற்போதே சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு முடிவுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் (India TV-CNX) சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பு என்பது மொத்தம் 18 மாநிலங்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி மேற்கு வங்காளம், ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, அசாம், அருணாச்சல பிரதேசம், திரிபுரா, மணிப்பூர், மேகலாயா, சிக்கிம், நாகலாந்து, மிசோராம் ஆகிய மாநிலங்களில் கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளது.
இன்றைய தினம் தேர்தல் நடந்தால் உங்களின் ஆதரவு யாருக்கு? என்ற அடிப்படையில் இந்த கரத்து கணிப்பானது செப்டம்பர் 20ம் தேதி முதல் அக்டோபர் 3ம் தேதி வரை மொத்தம் 54,250 பேரிடம் மேற்கொள்ளப்பட்டது. இதில் 28,309 பேர் ஆண்கள். 25,941 பேர் பெண்கள் ஆவார்கள்.
இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதாவது மேற்கூறிய 18 மாநிலங்களில் மொத்தம் 282 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக 118 இடங்களிலும், இந்தியா கூட்டணி 110 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக பாஜக மத்திய பிரதேசத்தில் 25 தொகுதிகளிலும், ராஜஸ்தான் மாநிலத்தில் 23 தொகுதிகளிலும், கர்நாடகாவில் 16 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 10 தொகுதிகளிலும், ஒடிசாவில் 8 தொகுதிகளிலும், சத்தீஸ்கரில் 7 தொகுதிகளிலும், தெலங்கானாவில் 6 தொகுதிகளிலும், அசாம் மாநிலத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 12 தொகுதிகளிலும், 7 வடகிழக்கு மாநிலங்களில் பாஜக தலைமையிலான கூட்டணி 7 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவில் பாஜக மற்றும் பாஜக கூட்டணிக்கு ஒரு இடங்கள் கூட கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் கர்நாடகாவில் 10, தமிழ்நாட்டில் 7 இடங்களிலும், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் தலா 4 இடங்களிலும், ராஜஸ்தான், தெலங்கானா, மேற்கு வங்க மாநிலங்களில் தலா 2 இடங்களிலும், அசாமில் ஒரு இடத்திலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் ‛இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக தமிழ்நாட்டில் 21 தொகுதிகளை அள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 30 தொகுதிகளிலும் வெல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 வடகிழக்கு மாநிலங்களில் இந்தியா கூட்ணி 3 இடங்களில் வெல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பாஜக, காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாத நிலையில் ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜி ஜனதாதளம் 15 இடங்களிலும், ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 15 தொகுதகிளிலும், தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி 17 தொகுதிகளில் 8 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications