வரப்போகுது பண்டிகை காலம்.. நாடு முழுக்க 6,000 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே முடிவு!
டெல்லி: ஆயுத பூஜை, தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து வர இருக்கும் நிலையில், இந்த பண்டிகை நாட்களில் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டு இருப்பவர்களுக்கு ரயில்வே குட் நியூஸ் ஒன்றை தெரிவித்துள்ளது. அதாவது பண்டிகை நாட்களில், 6 ஆயிரம் சிறப்பு ரயிலை இயக்க முடிவு செய்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதேபோல, புலம் பெயர் தொழிலாளர்களும் பண்டிகை காலங்களில் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்கிறார்கள். இதனால், எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தொலை தூர ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

ரயில்களில் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருக்கிறது. இந்த பண்டிகை நாட்களை கணக்கில் வைத்துக் கொண்டு பலரும் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் புக் செய்து விடுவார்கள். தட்கல் டிக்கெட்டுகளும் நொடிகளில் காலியாகிவிடும். பெரும்பலான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பது இல்லை. இதனால், முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டிகளிலும் மூச்சு முட்டும் அளவுக்கு பயணிகள் நெரிசலாக பயணிக்கிறார்கள்.
சமீப காலமாக முன்பதிவு பெட்டிகளிலும், முன்பதிவு இல்லாத டிக்கெட் வைத்து இருக்கும் பயணிகள் அத்துமீறி ஆக்கிரமித்துக் கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. இதற்கு ரயில்வே போதிய சிறப்பு ரயில்கள் இயக்காததே காரணம் என்ற குற்றச்சாட்டு பயணிகள் மத்தியில் முன்வைக்கப்படுகிறது. வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அடுத்தடுத்து பண்டிகைகள் வருகிறது. ஆயுத பூஜை மற்றும் துர்கா பூஜை வரும் அக்டோபர் 9, 10 ஆம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது.
31 ஆம் தேதி தீபாவளி பண்டிகையாகும். நவம்பர் 7 ,8 ஆம் தேதிகளில் சத் பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை வட மாநிலங்களில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை காலங்களில் பீகார், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களில் செல்லும் ரயில்களில் கூட்டம் அலைமோதும். இதனை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், "பண்டிகை காலத்தில் கடந்த ஆண்டு 4,429 சிறப்பு ரயில்கள் இயக்கப்படன. இந்த ஆண்டு அதை விட கூடுதலாக 5,975 ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு சிரமம் இன்றி செல்லலாம். இது தவிர பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க 108 ரயில்களில் கூடுதல் பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12,500 பெட்டிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது" இவ்வாறு அமைச்ச கூறினார். தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு மக்கள் அதிக அளவில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். தீபாவளி பண்டிகை நாட்களில் சொந்த ஊர் செல்வதற்கு பெரும்பாலான ரயில்களில் டிக்கெட் இல்லை.. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் வெயிட்டிங் லிஸ்ட்தான் காண்பிக்கிறது. எனவே, பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் பயணிகளிடம் ஏற்பட்டு இருக்கிறது.. கூடுதல் ரயில்களை இயக்குறாங்களா பார்ப்போம்..
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications