முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் பிஜி தேர்வு ஒத்திவைப்பு.. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.. ஏன்?
டெல்லி: ஜூன் 15 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. ஒரே ஷிப்டில் தேர்வை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் தொடர்ச்சியாக தேசிய தேர்வு முகமை தேர்வை ஒத்திவைத்துள்ளது.
நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைத்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரும் ஜூன் 15 ஆம் தேதி நீட் முதுநிலை தேர்வு நடைபெற இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீட் பிஜி தேர்வை ஒரே கட்டமாக நடத்த உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்ததால், அதனை செயல்படுத்த கால அவகாசம் தேவை என்பதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மேற்படிப்புகளுக்காக நீட் பிஜி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நீட் பிஜி தேர்வு வரும் 15 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த தேர்வுகள் இரண்டு ஷிப்ட்களாக நடைபெறும் எனக் கூறியயிருந்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், NEET-PG தேர்வை இரண்டு ஷிப்டுகளுக்குப் பதிலாக ஒரே ஷிப்டில் நடத்த உத்தரவிட்டது.
நீட்-பிஜி தேர்வுகளை இரண்டு ஷிப்டுகளில் நடத்தும் தேசிய தேர்வு வாரியத்தின் முடிவை "எதேச்சதிகாரமான தன்மையை உருவாக்குகிறது" என்று உச்ச நீதிமன்றம் கூறியது. நீட் பிஜி தேர்வை ஒரே ஷிப்டில் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும், இது தொடர்பாக சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், நீட் முதுநிலை தேர்வை ஒரே கட்டமாக நடத்த கால அவகாசம் தேவை என்பதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications