‛நேரு’ பெயர் இருக்க கூடாது? டெல்லி அருங்காட்சியக நூலகத்தின் பெயர் மாற்றம்! காங்கிரசுக்கு வந்த கோபம்
டெல்லி: டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் (என்எம்எம்எல்) பெயர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேருவின் பெயர் அகற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய பெயருக்கு அனைவரையும் வியக்க வைத்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள பல்வேறு இடங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. பிரிட்ஷ்காரர்கள் மற்றும் முகலாயர்களை குறிக்கும் வகையில் இருக்கும் தெருக்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகல் (முகாலய) தோட்டத்தின் பெயரை ‛அம்ரித் உத்யன்' என பெயர் மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. முகல் என்பது முகலாயர்களை குறிக்கும் என்பதால் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் தான் தற்போது டெல்லியில் பிரபலமான நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் (என்எம்எம்எல்) பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயர் என்பது பிரதம மந்திரிகள் அருங்காட்சியகம் மற்றும் நூலக(பிஎம்எம்எல்) சொசைட்டி என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனை அந்த அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் நிர்வாகக்குழு தலைவரான என நிர்பேந்திரா மிஸ்ரா உறுதி செய்துள்ளார். நாட்டில் 77 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது இதுபற்றி அதன் துணைத் தலைவர் ஏ சூர்ய பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் இப்போது பிரதம மந்திரிகள் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் சொசைட்டி என மாற்றம் செய்யப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் அந்த அருங்காட்சியகம் மற்றும் நூலக சொசைட்டியின் சிறப்பு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில தான் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரில் இருந்து நேருவின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நேருவின் பெயரில் உள்ள கட்டடங்களில் இருந்து நேருவை சிலரால் அகற்றி அவரது புகழை மறைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் நேரு இந்தியாவுக்காக செய்த செயல்கள் மூலம் மக்கள் மனதில் நிலைத்து இருப்பார் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications