நாட்டின் முதல் பிரதமர் யார்? பாஜக வேட்பாளர் நடிகை கங்கனா ரனாவத்தால் ஆடிப்போன நெட்டிசன்கள்! ட்ரோல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் யார்? என்பது பற்றி தெரியாமல் நடிகையும், லோக்சபா தேர்தலில் பாஜக வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ள கங்கனா ரனாவத் பேசிய வீடியோ இணையதளத்தில் வெளியான நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் உள்பட நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்தியாவில் உள்ள பிரபலமான நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத். இவர் தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடித்த தாம்தூம் படத்தில் ஹீரோயினாக நடித்தார். தற்போது கங்கான ரானாவத் அரசியல் வாதியாக மாறி உள்ளார்.

Nehru or Netaji Subhash Chandra Bose Who is the first PM of india after the Kangana Ranaut answer she trolled by netizens

அதாவது வரும் லோக்சபா தேர்தலில் பாஜக வேட்பாளராக கங்கனா ரனாவத் அறிவிக்கப்பட்டுள்ளார். இமாச்சல பிரதேச மாநிலம் மாண்டி தொகுதியில் பாஜக சார்பில் நடிகை கங்கனா ரனாவத் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

தேர்தல் தேதி நெருங்கிய நிலையில் கங்கனா ரனாவத் மாண்டி தொகுதியில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நடிகை கங்கனா கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவுடன் நெருக்கம் காட்டி வந்த நிலையில் லோக்சபா தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் முறைப்படி பாஜகவில் இணைந்து தேர்தல் பணியை தொடங்கி உள்ளார்.

பாஜக வேட்பாளரானார் நடிகை கங்கனா ரனாவத்.. மண்டி தொகுதியில் வெல்வாரா? களநிலவரம் என்ன தெரியுமா?


இந்நிலையில் தான் நடிகை கங்கனா ரானவத்தை நெட்டிசன்கள் திடீரென்று கிண்டல் செய்து வருகின்றனர். மேலும் சிலர் கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் முதல் பிரதமர் யார்? என்பது தான். அதாவது தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை கங்கனா ரனாவத் பங்கேற்று பேசினார்.

அப்போது அந்த நிகழ்ச்சியில் பெண் தொகுப்பாளர் இந்தியில் கேள்வி கேட்கிறார். அதற்கு கங்கனா ரனாவத் இந்தி, ஆங்கிலம் கலந்து பதிலளிக்கிறார். அப்போது அவர் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என கூறுகிறார். சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவின் பிரதமராக பொறுப்பு வகிக்கவே இல்லை. மாறாக இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் சுபாஷ் சந்திரபோஸ் முக்கிய பங்காற்றினார்.

கங்கனா ரனாவத், ராகுலின் சித்தி மேனகா காந்தி போட்டி.. வெளியானது பாஜகவின் 5வது வேட்பாளர் பட்டியல்

மேலும் அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட்டார். அதன்பிறகு பார்வார்ட் பிளாக்கை தொடங்கினர். அவர் இதுவரை பிரதமராக இருந்தது இல்லை. இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு தான் இருந்தார். இவர் 1947 ஆகஸ்ட் 15ம் தேதி முதல் அவரது மரணம் வரை 1964 மே மாதம் 27 ம் தேதி வரை பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கங்கனா ரனாவத் இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் எனக்கூறியது தான் தற்போது ட்ரோல் செய்யப்படுகிறது.

நடிகர் பிரகாஷ் ராஜ் உள்பட பலரும் அவரை ட்ரோல் செய்துள்ளனர். நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛
என்ன ஒரு அவமானம்.. உச்சபட்ச ஜோக்கர் கட்சியின் கோமாளிகள். இவர்கள் தான் மகாபிரவின் ஆஸ்தான விதூஷகர்’’ என ட்ரோல் செய்துள்ளார். அதேபோல் பலரும் கங்கனா ரனாவத்தை ட்ரோல் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+