முதல் நொடி அதீத சத்தம்.. அடுத்த நொடி எல்லாம் போச்சு.. டெல்லி கார் வெடிப்பு.. புதிய சிசிடிவி வீடியோ!
டெல்லி: கடந்த திங்கள்கிழமை டெல்லியில் மிக மோசமான ஒரு குண்டுவெடிப்பு அரங்கேறியது. செங்கோட்டை அருகே ஏற்பட்ட இந்த கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இதற்கிடையே இந்த மோசமான சம்பவம் தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் என்ன நடந்தது என்பதை நம்மால் தெளிவாகப் பார்க்க முடிகிறது.
டெல்லியில் திங்கள்கிழமை மாலை மோசமான கார் குண்டுவெடிப்பு அரங்கேறியது. இந்தச் சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தலைநகர் டெல்லியில் சமீப காலங்களில் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்ததே இல்லை..

செங்கோட்டை கார் வெடிப்பு
டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ நிலையம் பக்கத்தில் இருந்த சிக்னலில் தான் கார் வெடித்துச் சிதறியுள்ளது. சரியாக மாலை 6.52 மணியளவில் இந்த கார் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. காரில் இருந்த சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டால் அருகே இருந்த வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரவே அதிக நேரம் பிடித்தது.
புதிய சிசிடிவி
இந்தச் சம்பவம் குறித்து முதலில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல பகீர் தகவல்கள் தெரிய வந்தது. டெல்லி போலீசார் இதைக் குண்டுவெடிப்பு என்றே வழக்குப்பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்திருந்தனர். மேலும், இது தீவிரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஆரம்பத்திலேயே எழுந்தது. அதைத் தொடர்ந்து தேசியப் புலனாய்வு முகமை விசாரணைக்கு இது மாற்றப்பட்டது. என்ஏஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் சூழலில், கார் வெடிப்பு தொடர்பாகப் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
#WATCH | Delhi | CCTV footage of the car blast near the Red Fort that claimed the lives of 8 people and injured many others.
— ANI (@ANI) November 12, 2025
Source: Delhi Police Sources pic.twitter.com/QeX0XK411G
என்ன நடந்தது
மொத்தம் 11 நொடிகள் ஓடும் அந்த வீடியோவை சிக்னலில் இருந்த சிசிடிவி கேமரா படமாக்கி இருந்தது. அதில் சிக்னல் அருகே டிராபிக் அதிகமாக இருந்ததால் வாகனங்கள் மெல்ல நகர்வது தெளிவாகத் தெரிகிறது. அப்போது சரியா ஆறாவது நொடி கண்ணைப் பறிக்கும் வெளிச்சம் தெரிகிறது. ஓரிரு நொடிகள் அந்த அதீத ஒளி இருக்கும் நிலையில், அதன் பிறகே ஒளி குறைகிறது. அப்போது மக்கள் பதறியடித்துக் கொண்டு ஓடுவது தெளிவாகத் தெரிகிறது.
இதுவரை டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாகப் பல்வேறு வீடியோக்கள் வெளியாகியுள்ள போதிலும், இதுதான் மிகத் தெளிவான மற்றும் அருகில் இருந்து கிடைத்த வீடியாவாகும். இதைப் புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். வெடிகுண்டு சரியாக எப்படி வெடித்தது.. எந்தளவுக்குப் பாதிப்பு இருந்தது என்பதை வைத்து விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். விசாரணையில் இந்த வீடியோ முக்கிய பங்கு வகிக்கும் என்றே தெரிகிறது.
பின்னணி
கடந்த திங்கள்கிழமை தான் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்ட ஒயிட் காலர் தீவிரவாதிகளை போலீசார் பிடித்தனர். அப்போது ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த திடீர் ரெய்டு தீவிரவாதிகளுக்குப் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தயாரித்து வைத்திருந்த வெடிகுண்டை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கார் வெடித்துச் சிதறியதாகத் தெரிகிறது.
வெள்ளை நிற ஹூண்டாய் i20 காரில் தான் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது இந்த காரை ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த உமர் நபி என்ற மருத்துவர் ஓட்டி வந்துள்ளார். டிஎன்ஏ பரிசோதனை மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications