டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் இன்று கொரோனா உச்சம் தொடும்...அதிர்ச்சி எச்சரிக்கை தந்த ஆராய்ச்சியாளர்கள்

Google Oneindia Tamil News

டெல்லி : நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இந்தியாவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு என்பது 4 லட்சத்தை எட்டி உள்ளது. தற்போது இந்தியாவில் மொத்தமாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை எட்டி உள்ளது.

3-வது அலைக்கு வாய்ப்பு.. குறைந்தபட்சம் 2 வாரம் ஊரடங்கு வேண்டும்.. எய்ம்ஸ் இயக்குனர் வலியுறுத்தல்! 3-வது அலைக்கு வாய்ப்பு.. குறைந்தபட்சம் 2 வாரம் ஊரடங்கு வேண்டும்.. எய்ம்ஸ் இயக்குனர் வலியுறுத்தல்!

மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள புள்ளி விபர கணக்கின்படி 10 மாநிலங்களில் உள்ள 71 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி போடும் பணிகளும் நடந்து வருகிறது. தடுப்பு மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஐஐடி கான்பூரில் கொரோனா பரவல் தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளனர்.

மே மாதத்தில் புதிய உச்சம்

மே மாதத்தில் புதிய உச்சம்

இந்த ஆய்வில், இந்தியா முழுவதும் கடந்த 7 நாட்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 4 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் மே 14 முதல் 18 வரையிலான காலத்தில் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 40 லட்சம் என்ற அளவில் இருக்கும்.

இனி 40 லட்சம் பேர் பாதிக்கலாம்

இனி 40 லட்சம் பேர் பாதிக்கலாம்

ஏப்ரல் 25 ல் புதிதாக கொரோனா வைரசிற்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3.4 லட்சம் முதல் 4.4 லட்சமாக இருந்தது. ஆனால் மே 4 முதல் 8 வரை எதிர்பாராத அளவிற்கு இது உச்சம் தொடும். கிட்டதட்ட 38 லட்சம் முதல் 48 லட்சம் பேர் ஒரு நாளைக்கு பாதிக்கப்படுவார்கள். இது மூன்றாவது அலை என்று கூட சொல்லலாம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதுடன் நிறுத்தி விடாமல், பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி அவசியம் போடனும்

தடுப்பூசி அவசியம் போடனும்

அக்டோபர் மாதத்திற்குள் 40 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளுபடி நாம் திட்டமிட வேண்டும். அதே சமயம் மிக அதிக அளவிலான சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பர். அதனால் மூன்றாவது அலை வந்தால் கூட இப்போது இருக்கும் அளவிற்கு பாதிப்பை தராது. இரண்டாவது அலையை எங்களால் முன்கூட்டியே சரியாக கணிக்க முடியவில்லை.

கொரோனாவை கணிப்பது கடினம்

கொரோனாவை கணிப்பது கடினம்

ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் இருந்து தான் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ளது. கொரோனா பரவல் தொடர்பாக கணக்கீட்டு மாதிரி ஒன்றை தயார் செய்து வருகிறார். கொரோனா வைரசின் தன்னை மிக வேகமாக மாறுபாடு அடைந்து வருகிறது. இதனால் கோவிட் 19 பற்றிய எந்த ஒரு கணிப்பும் இந்த சூழலில் சரியானதாக இருக்காது என தெரிவித்துள்ளனர்.

English summary
peak of active caseload could touch around 40 lakh between May 14 to 18
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X