சர்ச்சைக்குரிய 3 குற்றவியல் சட்டங்கள் சூப்பர் மாற்றத்தை தரும்..மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின் சர்ச்சைக்குரிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்(கிரிமினல் சட்டங்கள்) சட்ட நடைமுறைகளில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மத்திய சட்டத்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் காலனித்துவ கால சட்டங்களை மாற்றி அமைக்கும் நோக்கில் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் கடந்த ஆட்சியில் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்சய சட்டம் ஆகிய மூன்று குற்றவியல் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டங்களுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக இந்த புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டன.

mk stalin

முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு: ஆனால் மத்திய அரசு நிறைவேற்றிய 3 சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க அவகாசம் தரப்படவில்லை. குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில் மாநிலங்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றன. 3 குற்றவியல் சட்டங்களில் சில அடிப்படை பிழைகள், முரண்பாடுகள் உள்ளன. அனைத்து துறைகளுடனும் ஆலோசித்து அமல்படுத்த போதிய கால அவகாசம் தேவை. சட்டங்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் பெயரிடபட்டுள்ளன. சட்டத்தின் பெயர் ஆங்கிலத்தில் இருப்பது அவசியம். சமஸ்கிருதத்தில் சட்டத்தின் பெயர்கள் இருப்பது அரசியல் அமைப்பு 348 ஐ மீறுவது ஆகும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதேபோல மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் இந்த 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

mk stalin

சென்னையில் கருத்தரங்கம்: இந்த பின்னணியில் மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகத்தின் சட்ட விவகாரங்கள் துறை சென்னையின் வேலூர் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் 'குற்றவியல் நீதி அமைப்பின் நிர்வாகத்தில் இந்தியாவின் முற்போக்கான பாதை' என்ற கருப்பொருளில் ஒரு நாள் மாநாட்டை நேற்று ஏற்பாடு செய்திருந்தது. டெல்லி, குவஹாத்தி மற்றும் கொல்கத்தாவைத் தொடர்ந்து நான்காவது நகரமாக சென்னையில் இந்த மாநாடு நடைபெற்றது.

நீதிபதிகள் பங்கேற்பு: இந்த மாநாட்டில் தென் மாநிலங்களைச் சேர்ந்த ஐந்து உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள், கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், சட்ட அமலாக்க முகமைகளின் பிரதிநிதிகள், காவல்துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள், சட்டப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்வேறு சட்டக் கல்லூரிகளைச் சேர்ந்த சட்ட மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

mk stalin

யார் யார் பங்கேற்பு?: இம்மாநாட்டின் தொடக்க அமர்வில் சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) அர்ஜுன் ராம் மேக்வால், தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆசிஷ் ஜிதேந்திர தேசாய், தெலங்கானா தலைமை நீதிபதி அலோக் ஆரதே, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (தற்காலிகப் பொறுப்பு) ஆர்.மகாதேவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இதில் கலந்து கொண்டனர்.

மாற்றம் உருவாகும்: இந்த நிகழ்ச்சியில் பேசிய நிகழ்ச்சியில் பேசிய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) அர்ஜுன் ராம் மெக்வால், நமது சட்ட அமைப்பு காலனிய ஆட்சியாளர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதாக கூறினார். தற்போது நாட்டின் சரியான சட்ட முறைகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறினார். பிரிட்டிஷாரின் குற்றவியல் நீதி பரிணாம வளர்ச்சியின் வரலாற்றுப் பின்னணியை அவர் விவரித்தார். காலனித்துவ காலத்தில் இந்தியாவில் இயற்றப்பட்ட சட்டங்கள் இந்தியாவின் நெறிமுறைகள் மற்றும் சமூக யதார்த்தங்களை புறக்கணித்தன என்று அவர் கூறினார். அந்தச் சட்டங்கள் காலனித்துவ ஆட்சியாளர்களின் தேவைகளை முன்னெடுத்துச் செல்வதை அடிப்படையாகக் கொண்டவை என்று அவர் கூறினார்.

சரியான திசையில் எடுக்கப்பட்ட முடிவு: தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல். முருகன் தமது உரையில், இந்த மூன்று புதிய சட்டங்களும் சரியான திசையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று பாராட்டினார். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகு, நாடு அதன் சொந்த நீதி முறைமைக்கு மாறியுள்ளது என்றும், காலனித்துவ கால சட்டங்களை மாற்றி அமைக்கும் முக்கிய முன்முயற்சி இது என்றும் அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+