கோவா, ஹரியானா, லடாக்கிற்கு புதிய ஆளுநர்கள் நியமனம்! TDP மூத்த தலைவருக்கு வாய்ப்பு
டெல்லி: கோவா, ஹரியானா மாநிலங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு புதியதாக ஆளுநர்களை குடியரசுத் தலைவர் நியமித்திருக்கிறார். இதில் தெலுங்கு தேசம் கட்சியின் (TDP) மூத்த தலைவரான அசோக் கஜபதி ராஜு கோவா ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஏற்கெனவே தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இரண்டு முக்கிய தலைவர்கள் மத்திய அரசாங்கத்தில் அமைச்சர்களாகப் பொறுப்பு வகிக்கின்றனர். இந்நிலையில் மற்றொரு மூத்த தலைவருக்கு மத்திய அரசு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த கிஞ்சரபு ராம் மோகன் நாயுடு, ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் எம்பியாக தேர்தவாகியிருந்தார். ஏற்கெனவே இந்த தொகுதியிலிருந்து இரண்டு முறை இவர் எம்பியாக இருந்திருக்கிறார். அந்த வகையில் இது மூன்றாவது முறை. தற்போது இவர் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக உள்ளார்.
இக்கட்சியை சேர்ந்த மற்றொரு எம்பி டாக்டர். சந்திர சேகர் பெம்மசானி. இவர் குண்டூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் தற்போது மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் தொலைத்தொடர்புத் துறை இணை அமைச்சராக உள்ளார்.
இப்படி இருக்கையில் மூன்றாவது நபரை தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து, முக்கிய பொறுப்புக்கு பாஜக தேர்வு செய்திருக்கிறது. என்னதான் தெலுங்கு தேசம் கட்சி பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும், சாதாரண கூட்டணி கட்சிக்கு எதுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்? என்று கேள்வி எழுந்திருக்கிறது.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்தாலும், துணை முதல்வராக இருக்கும் ஜனசேனா கட்சியின் தலைவரான பவன் கல்யாண் பெரிய அளவில் கவனம் பெற்று வருகிறார். ஒருவேளை பவன் கல்யாணை வைத்து, தெலுங்கு தேசம் கட்சியை கைப்பற்ற பாஜக திட்டமிடுகிறதோ? அதற்காகத்தான் இந்த ஆளுநர் பதவியோ என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications