வருமான வரி.! புதிய வரி முறை சூப்பர் தான்.. ஆனா கூடவே "இது" மட்டும் கிடைத்தால் அடிதூள்! நோட் பண்ணுங்க
டெல்லி: நமது நாட்டில் வரும் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இதில் மிடில் கிளாஸ் மக்களுக்கு வருமான வரி உயர்த்தப்படும் என்றே பலரும் எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக ஆண்டுக்கு புதிய வரி முறையில் 10 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு கிடைக்கச் சாத்தியம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், புதிய வரி முறையில் ஒரு சிக்கல் இருக்கிறது. இது தொடர்பாக வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நாம் பார்க்கலாம்.
இந்தாண்டிற்கான மத்திய பட்ஜெட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. ஜிடிபி வளர்ச்சி குறைந்துள்ள நிலையில், அதையும் நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.

பணவீக்கம் காரணமாகச் செலவுகள் அதிகரித்துள்ள சூழலில், மிடில் கிளாஸ் மக்களுக்கும் வரிச்சலுகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
வரி விலக்கு:
மக்கள் கைகளில் அதிக பணம் இருந்தால் மட்டுமே நுகர்வு அதிகரிக்கும் என்பதால் மத்திய அரசு இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இது மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர உதவியாக இருக்கும் என்றே பொருளாதார வல்லுநர்களும் கூட வலியுறுத்துகிறார்கள். இதைச் சாத்தியப்படுத்த வரிச் சலுகைகள் மட்டுமே சிறந்த வழியாக இருக்கும்.
இது தொடர்பாக டீம்லீஸ் ரெக்டெக் நிறுவனர் மற்றும் இயக்குநர் சந்தீப் அகர்வால், "இந்தியா தனது வளர்ச்சி வேகத்தை 2ம் காலாண்டில் இழந்துவிட்டது. இதனால் வளர்ச்சியை மீண்டும் உறுதி செய்வதே இந்த பட்ஜெட்டின் நோக்கமாக உள்ளது. ஆண்டு வருமானம் ரூ. 15 லட்சம் வரை இருப்போருக்கான வரி விகிதங்களை மாற்ற வேண்டும்" என்றார்.
புதிய வரி முறை:
புதிய வரி முறையில் இருப்போருக்கு மிகப் பெரிய பலன் அளிக்கும் விதமாக வருமான வரி முறையில் இரண்டு முக்கிய மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ரூ.10 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு வரி விலைக்குக் கிடைக்கலாம். அதேபோல ரூ.15-20 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்குப் புதிதாக 25% வரி விதிக்கப்படலாம் என்று பிசினஸ் ஸ்டாண்டர்ட் தெரிவித்துள்ளது. இந்த ரிப்போர்ட்டில் இருப்பது போலவே பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டால் அது புதிய வரி முறையில் இருப்போருக்கு மிகப் பெரிய பலனையே அளிக்கும்.
வரி சலுகை:
புதிய வரி முறைக்கு இதுபோல வருமான வரி உச்சவரம்பு இருந்தாலும் கூட இதில் வரிச் சலுகை எதுவும் கிடைக்காது. இதன் காரணமாகக் குறிப்பிட்ட அளவுக்கு மக்கள் பழைய முறையில் இருக்கவே விரும்புகிறார்கள். எனவே, அதில் இருக்கும் வரிச் சலுகை ஆப்ஷன்களில் சில முக்கியமானவற்றை புதிய முறைக்குக் கொண்டு வர வேண்டும் என வல்லுநர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
வல்லுநர்கள் சொல்வது என்ன:
இது தொடர்பாக விஎஸ்ஆர்கே கேபிட்டலின் இயக்குநர் ஸ்வப்னில் அகர்வால் கூறுகையில், "புதிய வருமான வரி முறையை இன்னும் வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்றால் பழைய முறையில் உள்ள சில அம்சங்களை இதில் நாம் கொண்டு வர வேண்டும். நீண்ட கால சேமிப்பு மற்றும் ஓய்வூதிய திட்டமிடல் ஆகியவற்றுக்கு வரிச் சலுகை தேவை. வரிச் சலுகை மட்டுமே ஓய்வூதிய நிதிகளில் பங்களிப்புகளை ஊக்குவிக்கும்.
புதிய விதி முறைகளில் ரூல்ஸ் எளிமையாகத் தான் உள்ளது. அதில் சந்தேகம் இல்லை.. ஆனால், பழைய விதி முறையில் உள்ள நெகிழ்வுத்தன்மை மற்றும் நன்மைகளை இதில் நாம் கொண்டு வர வேண்டும். அப்போது தான் வரி செலுத்துவோருக்குத் தேவையான நிவாரணம், சமூகப் பாதுகாப்பு மற்றும் நிலையான முதலீடுகள் கிடைக்கும். இது முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications