தேசியக் கொடியின் 75ம் ஆண்டுக் கொண்டாட்டம்.. நேதாஜி உருவப்படத்துடன் ரூ. 75 நாணயம் வெளியிட திட்டம்
நேதாஜி படத்துடன் ரூ. 75 நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Recommended Video

டெல்லி: தேசியக் கொடியின் 75வது ஆண்டு நினைவைக் கொண்டாடும் வகையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படம் பொறிக்கப்பட்ட 75 ரூபாய் நாணயத்தை வெளியிட முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாகவே கடந்த 1943ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி, போர்ட் ப்ளேயரில் உள்ள செல்லுலார் சிறையின் முன் மூவர்ணக் கொடியை முதன்முதலாக ஏற்றினார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இந்த நிகழ்வு நடைபெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற உள்ளது.

இந்நிலையில், தேசியக் கொடியின் 75வது ஆண்டு நினைவைக் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 75 ரூபாய் நாணயத்தை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'அந்த நாணயத்தில் சுபாஷ் சந்திர போஸ் படம் பொறிக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 75 ரூபாய் நாணயமானது, 35 கிராம் எடையில் 50% வெள்ளி, 40% செம்பு மற்றும் 10% நிக்கல் மற்றும் ஜிங்க் ஆகியவை கலந்து தயாரிக்கப்படுகிறது.
மேலும், இந்த நாணயத்தில் First Flag Hoisting Day என்ற வாசகம் ஆங்கிலத்திலும் தேவநாகரி மொழியிலும் பொறிக்கப்படும் எனத் தெரிகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications