செம ஸ்கெட்ச்.. கவனத்தை திருப்பும் லடாக் 'ஷிங்குன் லா'.. எல்லையில் சுரங்கப்பாதை.. மத்திய அரசு ஒப்புதல்
அமெரிக்க ராணுவத்துடன் சேர்ந்து இந்தியா கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டதிலிருந்து சீனா எல்லை விவகாரத்தில் கறாராக இருக்கிறது.
டெல்லி: சீனாவுடனான எல்லைப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், லடாக்கில் நிமு-பாதம்-தர்ச்சா சாலை இணைப்பில் 'ஷிங்குன் லா' சுரங்கப்பாதை அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சீனா முன்னெப்போதும் இல்லாத வகையில் அதன் எல்லையில் தனது கட்டுமானத்தை விரிவுப்படுத்தி வருகிறது. புதிய சாலைகளை அமைத்தல், கிராமங்களை உருவாக்குதல் என அதிரடியாக களமிறங்கியிருக்கிறது. குறிப்பாக பூடானின் டோக்லாம் பகுதியில் சீனா புதிய கிராமங்களை கட்டமைத்துள்ளது. லடாக்கில் சாலைகளை விரிவுப்படுத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த பதற்றத்தை தணிக்கும் வகையில் இந்தியா அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தற்போது லடாக்கில் நிமு-பாதம்-தர்ச்சா சாலை இணைப்பில் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி வரும் 2025ம் ஆண்டுக்குள் ரூ.1,681 கோடி செலவில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்படும். இந்த பாதை அனைத்து சாலைகளுடன் ஒரு இணைப்பை உருவாக்கும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

புதிய பாதை
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, "நாட்டின் பாதுகாப்புக்கு இந்த சுரங்கப்பாதை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே இந்த பாதைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. லடாக்கில் பாதுகாப்புப் படையினரின் ரோந்து மற்றும் போக்குவரத்திற்கு இந்த பாதை இன்றியமையாததாக இருக்கும்" என்று கூறியுள்ளார். இதற்கு முன்னர் இமயமலையின் பிர் பஞ்சால் தொடரில் அமைக்கப்பட்ட 'அடல்' சுரங்கப்பாதை மணாலி - லாஹுல் ஸ்பிடி பள்ளத்தாக்கை இணைத்தது. ரூ.3,300 கோடியில் கட்டப்பட்ட இந்த சுரங்கப்பாதை உலகின் நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையாக இருக்கிறது.

உயரமான சுரங்கப்பாதை
இந்த சாலை மூலம் விவசாயிகள், சுற்றுலாத்துறையினர் பலனடைவார்கள் என்று மத்திய அரசு கூறியிருந்தது. இதைவிட முக்கியமாக பாதுகாப்பு படையினருக்கு இந்த சாலை அதிக அளவில் பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்லப்பட்டது. தற்போது இதே பாணியில் மற்றொரு சுரங்கப்பாதை லடாக்கில் அமைகிறது. இந்த சாலையை தேசிய நெடுஞ்சாலை மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் அமைக்க இருக்கிறது. 13.5 கி.மீ நீளத்தில் அமைய உள்ள இந்த சுரங்கப்பாதையானது உலகின் மிக உயரமான பகுதியில் அமையும் சுரங்கப்பாதை என்கிற பெருமையை பெற இருக்கிறது.

இணைப்பு
இந்த சுரங்கப்பாதையுடன் லடாக் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் லஹால் -ஸ்பிட்டி சாலைகள் இணைகிறது. எனவே இந்த சாலைகளின் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியா தரப்பில் சாலை அமைக்கும் பணிகள் சமீப காலங்களாகதான் தீவிரமடைந்து வரும் நிலையில், சீனா இதற்கு முன்னரே இந்த பணியை தொடங்கிவிட்டது. கிழக்கு லடாக்கின் எல்லையையொட்டிய பகுதியில் நெடுஞ்சாலையை அமைத்தும் அப்பகுதியில் முகாம்களையும் அமைத்து வருகிறது. அதேபோல பதற்றமான பகுதியான 'பான் காங் தா சோ' ஏரியின் தென் கரையிலும் நெடுஞ்சாலையை சீனா சீரமைத்து வருகிறது.

கட்டுமானம்
இந்த கட்டமைப்புகள் அனைத்தும் சட்டத்திற்கு புறம்பானவை என்று இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. இருப்பினும் சீனா தனது கட்டுமானப்பணிகளை கைவிடவில்லை. சமீபத்தில் இந்தியா, அமெரிக்க ராணுவத்துடன் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டதிலிருந்து சீனா எல்லை விவகாரத்தில் கறாராக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications