'C.1.2' புதிய உருமாறிய கொரோனா.. மின்னல் வேகத்தில் பரவுகிறது, வேக்சினும் வேலை செய்வதில்லை..ஷாக் தகவல்
டெல்லி: தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட புதிய உருமாறிய C.1.2 கொரோனா தொற்று, மிக வேகமாகப் பரவலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக அவை தடுப்பூசிக்கும் கட்டுப்படாமல் போக அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கடந்த ஓர் ஆண்டாகவே உலக நாடுகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது கொரோனா பாதிப்பு தான். உலகில் எந்தவொரு நாட்டினாலும் இதுவரை கொரோனா பாதிப்பை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை.
தீவிரமான கொரோனா கட்டுப்பாடுகள் மூலம் சில நாடுகள் மட்டுமே இதைக் கட்டுக்குள் வைத்துள்ளது. குறிப்பாக இந்த கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டிருப்பது பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய உருமாறிய கொரோனா
இந்நிலையில், கடந்த மே மாதம் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய C.1.2 கொரோனா வகை அதிவேகமாகப் பரவ வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் தேசிய தொற்றுநோய் நிறுவனம் (NICD) மற்றும் KwaZulu-Natal ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை சீனா, காங்கோ, மொரிஷியஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, போர்ச்சுகல் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இந்த உருமாறிய கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளது.

C.1.2 கொரோனா
முதல் அலை சமயத்தில் தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய C.1 என்ற உருமாறிய கொரோனாவில் இருந்து மேலும் உருமாற்றம் அடைந்து இந்த புதிய C.1.2 உருமாறிய கொரோனா தோன்றியிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் இந்த C.1.2 கொரோனா தொற்று கண்டறியப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதம் genomes sequence செய்யப்பட்ட மாதிரிகளில் 0.2% பேருக்கு மட்டும் இந்த C.1.2 கொரோனா பாதிப்பு இருந்தது. இது கடந்த மே மாதம் 1.6%ஆகவும் அதைத்தொடர்ந்து ஜூலை மாதம் 2% ஆகவும் அதிகரித்துள்ளது.

அதிகளவில் உருமாற்றம்
முதலில் பீட்டா மற்றும் டெல்டா கொரோனா வகைகள் கண்டறியப்பட்ட போது, அவை எப்படிப் பரவியதோ அதுபோலவே இப்போது இந்த பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த உருமாறிய கொரோனாவின் புரத ஸ்பைக் பெரியளவில் உருமாற்றம் அடைந்துள்ளதாகவும் இது சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட வைரசை விடப் பெரியளவில் மாறியுள்ளதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தடுப்பூசிக்குப் பலன் தராது
இது குறித்து கொல்கத்தாவின் சிஎஸ்ஐஆர் -இந்திய ரசாயன உயிரியல் நிறுவனத்தின் ஆய்வாளர் ரே கூறுகையில், "இந்த உருமாறிய கொரோனா வேகமாகப் பரவும் ஆபத்து உள்ளது. புரத ஸ்பைக் பெரியளவில் மாற்றமடைந்துள்ளதால் தடுப்பூசி அளிக்கும் நோயெதிர்ப்பு சக்தியிலிருந்து இது தப்பவும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த கொரோனா உலகெங்கும் பரவினால் இது பெரிய தலைவலியை ஏற்படுத்தும். எனவே, இந்த வைரஸ் பரவுவதை நாம் முதலில் கட்டுப்படுத்த வேண்டும்." என்றார்.

ஏன் தடுப்பூசிக்குப் பலன் தராமல் போகலாம்
ஒரு வைரசைச் சுற்றிலும் பொதுவாகவே புரத ஸ்பைக் இருக்கும். நமது மனித உடலில் இருக்கும் செல்களில் அது இந்த புரத ஸ்பைக்கைக் கொண்டே ஊடுவுரும். தற்போது உருவாக்கப்பட்டுள்ள பெரும்பாலான கொரோனா வேக்சின்கள் இந்த புரத ஸ்பைக்கை அழிக்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புரத ஸ்பைக் முற்றிலுமாக மாறினால், தடுப்பூசி இதற்குப் பலன் தராமல் போக வாய்ப்புள்ளது. இருப்பினும், இது குறித்து தற்போது உறுதியாகக் கூற முடியாது என்றும் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications