டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிறந்தது புத்தாண்டு 2023! களைகட்டிய கொண்டாட்டங்கள்! நியுலாந்துக்கு முன்னதாகவே கொண்டாடிய நாடுகள்!

Google Oneindia Tamil News

டெல்லி : மகிழ்ச்சி, சோகம், விறுவிறுப்பு, பரபரப்பு என கலந்து கட்டிக் கொடுத்த 2022ஆம் ஆண்டு தற்போது விடை பெற்று இருக்கிறது. நியூசிலாந்துக்கு முன்னதாகவே கிழக்கு பசிபிக் நாடுகளான சமோவா, கிரிப்பட்டி, டோங்கா உள்ளிட்ட நாடுகள் புத்தாண்டை வரவேற்றுள்ளன.. இதையடுத்து அந்தப் பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளது.

ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து டிசம்பர் 31ஆம் தேதியான இன்று வரை ஆண்டின் மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்த 2022ஆம் ஆண்டு இன்றுடன் விடைபெறுகிறது. இந்த ஆண்டில் ஒவ்வொருவருக்கும் பலவிதமான நினைவலைகள் இருக்கலாம்..

அது மகிழ்ச்சியாகவோ சோகமாகவோ எப்படி வேண்டுமானாலும் அமைந்திருந்தாலும் சில நிகழ்வுகளை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.. சமூகம், பொருளாதாரம், அரசியல், விளையாட்டு என பல துறைகளில் பல மாற்றங்கள் இந்தாண்டில் நிகழ்ந்திருக்கிறது.

புத்தாண்டு கொண்டாட்டம்

புத்தாண்டு கொண்டாட்டம்

கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் கோடிக்கணக்கான நினைவுகளையும் நிகழ்வுகளையும் தன்னகத்தே புதைத்துக் கொண்டு 2022 ஆம் ஆண்டு விடைபெறும் நிலையில் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது. ஆனால் தற்போது நாம் மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உலகில் முதல் நாடுகளாக சமோவா, கிரிப்பட்டி, டோங்கா உள்ளிட்ட நாடுகள் புத்தாண்டை வரவேற்றுள்ளன.

பசிபிக் தீவுகள்

பசிபிக் தீவுகள்

இந்திய நேரப்படி சரியாக 4.29.05 மணிக்கு பூமியின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கிற பசிபிக் தீவு நாடுகளான சமோவா, கிரிப்பட்டி. டோங்கா உள்ளிட்ட நாடுகளில் புத்தாண்டு பிறந்தது. இதனைத் தொடர்ந்து சின்னஞ்சிறு தீவு நாடான நியூசிலாந்து புத்தாண்டை வரவேற்று இருக்கிறது. இந்திய நேரப்படி சரியாக நான்கு முப்பது மணிக்கு நியூஸிலாந்தில் புத்தாண்டு பிறந்த நிலையில் வான வேடிக்கைகள் அந்நாட்டையே வண்ணமயமாக மாற்றியுள்ள நிலையில் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் இனிப்புகளை வழங்கி ஆரத்தழுவி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

வான வேடிக்கைகள்

வான வேடிக்கைகள்

இதன் மூலம் சர்வதேச அளவில் 2022ஆம் ஆண்டு முடிந்து 2023ஆம் ஆண்டு பிறந்திருக்கிறது. புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு நியூசிலாந்தின் ஆக்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. சரியாக நான்கு முப்பது மணிக்கு கவுண்ட் டவுன் முடிந்து புத்தாண்டு பிறந்ததும் வானை பிளக்கும் வான வேடிக்கைகளை மக்கள் ஆர்வத்தோடு கண்டு ரசித்தனர். இதுமட்டுல்லாமல் நடனம், இடை என கேளிக்கைகளும் களைகட்டியுள்ளது.

அடுத்தடுத்து கொண்டாட்டம்

அடுத்தடுத்து கொண்டாட்டம்

நியூசிலாந்தை தொடர்ந்து ரஷ்யா நாட்டின் சில பகுதிகள், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், கான்பரா உள்ளிட்ட பகுதிகளில் 5.30க்கு புத்தாண்டு தொடங்குகிறது, அதற்கு அடுத்ததாக ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளில் 8:30-க்கும், சீனா சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் 9.30க்கும் இந்தோனேசியாவில் 10:30-க்கும், மியான்மரில் 11 மணிக்கும், வங்கதேசத்தில் 11.30 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது.

கடைசி நாடு

கடைசி நாடு

அதற்கு அடுத்ததாக சரியாக 12 மணிக்கு இந்தியாவிலும், 12:30 மணிக்கு பாகிஸ்தானிலும், அதிகாலை 4 மணிக்கு ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன. லண்டனில் அதிகாலை 5.30 மணிக்கு புத்தாண்டு தொடங்கும் நிலையில் 5:50 மணிக்கு பேக்கர் தீவில் புத்தாண்டு பிறக்கும். இதுதான் இந்த புத்தாண்டு பிறக்கும் கடைசி நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The year 2022 has now been ended. Countries like Samoa, Kiribati, Tonga and others in the East Pacific have welcomed the New Year before New Zealand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X