டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தூக்கு தண்டனைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் நிர்பயா கொலை குற்றவாளிகள் மூவர் முறையீடு!

Google Oneindia Tamil News

டெல்லி: தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என்று நிர்பயா கொலை குற்றவாளிகள் மூன்று பேர் சர்வதேச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டையே உலுக்கிய நிர்பயா கொலை வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த 4 பேரும் சட்டத்தில் உள்ள அத்தனை வாய்ப்புகளையும் இடைவிடாது பயன்படுத்தி தூக்கு தண்டனை நிறைவேற்றத்துக்கு தடை பெற்று வருகின்றனர்.

Nirbhaya Rapists move International Court of Justice to seek stay on execution of death sentence

உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்வது, அது நிராகரிக்கப்பட்டால் ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்வது, அது நிராகரிக்கப்பட்டால் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடுவது என ஒரு சுழற்சியான போக்கை நிர்பயா கொலை குற்றவாளிகள் பின்பற்றுகின்றனர். இதனால் இவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவது 3 முறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

தற்போது வரும் 20-ந் தேதி நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு டெல்லி திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தங்களுக்கான தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என்று நிர்பயா கொலை குற்றவாளிகள் திஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். நிர்பயா கொலை குற்றவாளிகள் அக்‌ஷய், பவண் மற்றும் வினய் ஆகியோர் சார்பில் சர்வதேச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனால் வரும் 20-ந் தேதியும் இவர்களது தூக்கு தண்டனை நிறைவேறுமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் நிர்பயா கொலை குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தை அணுகியிருப்பது பெரும் சர்ச்சையாகவும் வெடித்துள்ளது.

English summary
Three convicts in Delhi gang rape case have approached the International Court of Justice (ICJ) seeking stay on the execution of their death sentence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X