அசத்தும் நிர்மலா சீதாராமன்...2 வது பெண் நிதியமைச்சர்...3 வது பட்ஜெட் தாக்கல்
டெல்லி : சுதந்திர இந்தியாவின் 2 வது பெண் நிதியமைச்சர், நாட்டின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் என்ற பெருமையை பெற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது 3 வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
கொரோனாவால் கடும் பாதிப்பிற்கு உள்ளான இந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதத்திலான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்வார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்படுத்தி உள்ளார். இதற்கு முன்பும், பின்பும் இப்படி ஒரு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை என்னும் அளவிற்கு இந்த பட்ஜெட் அமையும் என கூறப்படுகிறது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு மத்திய நிதியமைச்சராக பொறுபேற்ற 2 வது பெண் அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். அத்துடன் நாட்டின் முதல் முழு நேர நிதியமைச்சர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் இவர் தான். இந்திரா காந்தி, பாதுகாப்புத்துறையுடன், கூடுதல் பொறுப்பாகவே நிதித்துறையை கவனித்து வந்தார்.
61 வது வயதாகும் நிர்மலா சீதாராமன், அருண் ஜெட்லியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, 2019 ல் இலாகா மாற்றம் செய்யப்பட்ட போது நிதியமைச்சராக பொறுப்பேற்றார். கடந்த 15 ஆண்டு கால தனது அரசியல் வாழ்க்கையில், 2010 களில் பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த போது பிரபலமானவர் நிர்மலா சீதாராமன்.












Click it and Unblock the Notifications