இன்டர்போல் ப்ளூகார்னர் நோட்டீஸ்.. நித்யானந்தா எங்கிருக்கிறார் தெரியுமா?
டெல்லி: இன்டர்போல் ப்ளூகார்னர் நோட்டீஸ் வழங்கிய நிலையில் நித்யானந்தா எங்கிருக்கிறார் என்ற உறுதிப்படுத்தாத தகவல்கள் கிடைத்துள்ளன.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் சிறுமி கடத்தல் விவகாரம் தொடர்பாக நித்யானந்தாவை போலீஸார் தேடி வருகின்றனர். கர்நாடகாவில் நித்யானந்தா மீது பாலியல் வழக்கும் நிலுவையில் உள்ளதால் நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிவிட்டார்.
அவர் ஈகுவடார் நாட்டில் ஒரு தீவை வாங்கியுள்ளதாகவும் அதற்கு கைலாசா என பெயர் வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து அவர் தனது டிவியில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

சர்வதேச போலீஸ்
இந்த நிலையில் நித்யானந்தாவை சர்வதேச போலீஸார் உதவியுடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டது. இந்த நிலையில் சிபிஐ மூலம் சர்வதேச போலீஸை குஜராத் போலீஸார் அணுகினர்.

ப்ளூகார்னர்
இதன் அடிப்படையில் நித்யானந்தாவுக்கு எதிராக இன்டர்போல் ப்ளூகார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இன்டர்போல் அதிகாரத்திற்குட்பட்ட 150 நாடுகளில் நித்யானந்தா எங்கிருக்கிறார் என்ற விவரம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

கரீபியன் தீவு
அவ்வாறு நித்யானந்தாவின் இருப்பிடம் கண்டறியப்பட்டால் அவரை கைது செய்ய ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிப்பார்கள். இந்த நிலையில் நித்யானந்தா கியூபா, மெக்சிக்கோவுக்கு அருகே உள்ள கரீபியன் தீவில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூர்மை
கரீபியன் தீவில் வசிப்போருக்காக வழங்கப்படும் பெஸிஸ் பாஸ்போர்ட்டை நித்யானந்தா வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதை யாரும் உறுதி செய்யவில்லை. நித்யானந்தாவின் நடவடிக்கையை இன்டர்போல் போலீஸார் கூர்மையாக கவனித்து வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications