சாப்பிட்டு 6 மாதமாச்சு.. வாந்தி வருது.. உலகில் வாழ ஆசை இல்லை.. கவலைபடாதீர்.. நித்திக்கு என்னாச்சு?
டெல்லி: எனது உடல்நிலை குறித்து சீடர்களும் பக்தர்களும் கவலைக் கொள்ள தேவையில்லை என நித்தியானந்தா அறிவுறுத்தியுள்ளார்.
Recommended Video
பெண் கடத்தல் மற்றும் பாலியல் பலாத்கார வழக்குகள் தொடர்பாக கர்நாடகா போலீஸாரால் தேடப்பட்டு வருபவர் நித்தியானந்தா. இவர் வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டார்.
அவர் ஆஸ்திரேலியா அருகே ஒரு குட்டி தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என்ற பெயரில் தனி நாடு உருவாக்கி உள்ளதாக அறிவித்து பரபரப்பை கிளப்பியிருந்தார்.

கைலாசா எங்கே
இந்த கைலாசா எங்கிருக்கிறது என போலீஸாருக்கு தெரியவில்லை. அவர் சொல்வது போல் கைலாசா என்ற ஒரு நாடு இருக்கிறதா என்ற சந்தேகமும் உள்ளது. இந்த நிலையில் கைலாசாவுக்கு தனிக் கொடி, பாஸ்போர்ட், கரன்சி உள்ளிட்டவைகளையும் வெளியிட்டுள்ளார். அவ்வப்போது நித்தியானந்தா தனது பக்தர்களுக்கு வீடியோ மூலம் சொற்பொழிவாற்றி வருகிறார்.

நித்தியானந்தா உடல்நிலை
இந்த நிலையில் கடந்த வாரம் நித்தியானந்தா உடல்நலம் பாதித்து மரணமடைந்துவிட்டதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவின. இதையடுத்து நித்தியானந்தா தனது முகநூல் பக்கத்தில் புகைப்படங்களுடன் கூடிய ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் நான் இறக்கவில்லை. சமாதி நிலையில் இருக்கிறேன்.

27 மருத்துவர்கள்
நான் இறந்துவிட்டதாக சமூகவலைதளங்களில் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். எனக்கு 27 மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது மருத்துவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. விரைவில் பூரணநலம் பெற்று திரும்புவேன் என கூறியிருந்தார்.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு
மேலும் "நான் திரும்ப வந்துட்டேனு சொல்லு" என அவர் எழுதுவது போல புகைப்படங்களும் வெளியானது. இந்த நிலையில் நித்தியானந்தாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் நேற்று புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், பரமசிவனின் ஆசிகள்! அனைத்து பக்தர்கள் மற்றும் சீடர்களுக்கு ஒரு சிறந்த செய்தி, அனைத்து மருத்துவ அறிக்கைகளும் தெளிவாக உள்ளது.

புற்றுநோயா
எனக்கு புற்றுநோய் அல்லது கட்டி எதுவும் இல்லை. இதய பிரச்சினையும் இல்லை. கொழுப்பு, கல்லீரல் பிரச்சினை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட எந்த பிரச்சினையும் இல்லை. சிறுநீரகங்கள், நுரையீரல், குடல் சரியாக செயல்படுகிறது. கொரோனா உள்பட வைரஸ் தொடர்பான எந்த நோய்களும் இல்லை. சுருக்கமாக சொன்னால் எல்லா உறுப்புகளும் சரியாக இயங்குகிறது.

எம்ஆர்ஐ ஸ்கேன்
எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. எனக்கு ஒரே பிரச்சினை என்னவெனில் உணவு உட்கொள்ள முடியவில்லை. நான் உணவை விழுங்க முயற்சிக்கும் போது எனக்கு வாந்தி வந்துவிடுகிறது. அது போல் தூக்கமும் இல்லை. நிர்வி கல்ப சமாதியில் எனது நித்ய சிவ பூஜையை தவிர உடலில் எந்த இயக்கமும் தன்னிச்சையாக நடக்கவில்லை. டாக்டர்களும் சீடர்களும் என்னை கீழே படுக்க வைத்து நன்றாக மூச்சுவிடும்படி வற்புறுத்துகிறார்கள்.

6 மாதங்களாக உணவு இல்லை
6 மாதங்களுக்கு மேலாக என்னால் உணவு உட்கொள்ள முடியாமல் உறக்கம் இல்லாமல் நிர்வி கல்ப சமாதியில் இருப்பது எனக்கு வழக்கமானதுதான். எனவே சீடர்களும் பொதுமக்களும் பயப்பட வேண்டாம். எல்லா கிரகங்களும் சாதகமாக இருக்கு. எனக்கு இப்போது மரணமோ விதேக சமாதியோ இல்லை. என்னை கவனித்து கொள்ள பெரிய மருத்துவமனை இருந்தால், என் உடலை மேம்படுத்தலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கவலைப்படாதீர்
என் மருத்துவ பராமரிப்பிற்காகவோ அல்லது தேவைப்படும் இயந்திரங்களுக்காகவே எந்த பணத்தையும் அனுப்ப வேண்டாம். என் உடலை கவனித்து கொள்ள நீங்கள் நிறைய செய்துவிட்டீர்கள். நான் வேலைகளை முழுமையாக பூர்த்தி செய்துவிட்டேன். எனக்கு இந்த உலகில் வாழ ஆசையும் இல்லை. இந்த உலகை விட்டு வெளியேறும் அளவுக்கு வெறுப்பும் இல்லை. எனது குருநாதர் அருணகிரி யோகேஸ்வரா என் உடல் முழுவதும் கலந்துள்ளார். என் உடல் எவ்வளவு காலம் சுறுசுறுப்பாகவும் உயிருடனும் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பர் அவர்தான் என அந்த பேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications