டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போட்டோ எடுத்து அனுப்பினால் ரூ.500 பரிசு.. வரப்போகிறது 50-50 சட்டம் - நிதின் கட்கரி சொன்ன தகவல்!

Google Oneindia Tamil News

டெல்லி : தவறான இடங்களில் வாகனத்தை பார்க் செய்தால் அதனை போட்டோ எடுத்து தகவல் அளிப்பவர்களுக்கு 500 ரூபாய் சன்மானம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தவறான இடத்தில் பார்க்கிங் செய்தவர்களிடம் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டால் அதில் 500 ரூபாய் தகவல் அளிப்போருக்கு தரப்படும் எனத் தெரிவித்தார்.

அக்னிபாத்தால் அக்னி குண்டமான பீகார்.. 22 ரயில்கள் ரத்து - 5 ரயில்களின் நேரம் மாற்றம் அக்னிபாத்தால் அக்னி குண்டமான பீகார்.. 22 ரயில்கள் ரத்து - 5 ரயில்களின் நேரம் மாற்றம்

விரைவில் பார்க்கிங் தொடர்பான இந்த புதிய சட்டத்தை விரைவில் கொண்டு வர இருப்பதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நிதின் கட்கரி

நிதின் கட்கரி

நோ பார்க்கிங் ஏரியாவில் வாகனங்களை நிறுத்தி வைப்பதால் வாகன நெரிசல் வெகுவாக அதிகரிக்கிறது. இந்தப் பிரச்சனையைத் ஒரு சட்டம் கொண்டுவர இருப்பதாக மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற இண்டஸ்ட்ரியல் டிகார்பனைசேஷன் மாநாட்டின் தொடக்க விழாவில் பேசிய நிதின் கட்காரி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

நோ பார்க்கிங்

நோ பார்க்கிங்

புதிதாக கொண்டு வரப்பட இருக்கும் சட்டத்தின்படி சாலையை மறித்து, நோ பார்க்கிங் ஏரியாவில் தவறாக நிறுத்தப்பட்டிருக்கும் வண்டிகளை போட்டோ எடுத்து அனுப்பினால் உடனே அந்த வண்டியை அப்புறப்படுத்தி, அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். போட்டோ எடுத்து அனுப்புபவர்களுக்கு சன்மானமாக 500 ரூபாய் வழங்கப்படும். இந்த சட்டத்தை விரைவில் கொண்டு வர இருப்பதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நெரிசலை குறைக்கலாம்

நெரிசலை குறைக்கலாம்

இதனால் மக்கள் அபராத தொகைக்கு பயந்து தவறாக பார்க்கிங் செய்யமாட்டார்கள். இதன்மூலம் சாலையின் குறுக்கே வாகனங்கள் நிறுத்துவதையும், போக்குவரத்து நெரிசலையும் தடுக்க முடியும். சாலை போக்குவரத்தும் சீராக, இடையூறுகள் இன்றி செயல்படும். மக்கள் தங்கள் வண்டிகளை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நிறுத்த வழிகளை ஏற்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

எப்போது அமல்?

எப்போது அமல்?

ஆனால் இந்தச் சட்டம் எப்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்பது குறித்தோ, எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்தோ மத்திய போக்குவரத்து அமைச்சகம் இதுவரை எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், அமைச்சர் நிதின் கட்கரி விரைவில் கொண்டு வரப்படும் எனத் தெரிவித்துள்ளதால், அடுத்த கூட்டத்தொடரிலேயே கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
"If Rs1,000 is the fine for a person guilty of the wrong parking, then Rs500 from that amount will go to the person who clicks the picture", says transport minister Nitin Gadkari.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X