குறையும் கச்சா எண்ணெய்! குறையாத பெட்ரோல் விலை! வரும் காலத்திலும் இதே நிலைதான்! என்ன காரணம் தெரியுமா

டெல்லி: சர்வதேச சந்தையில் 6 மாதங்களில் இல்லாத அளவுக்குக் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஒரு ரூபாய் கூட குறையவில்லை.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சர்வதேச சந்தையில் 6 மாதங்களில் இல்லாத அளவுக்குக் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஒரு ரூபாய் கூட குறையவில்லை.

Recommended Video

    சிலிண்டர் விலை உயர்வு.. அதிமுக, பாஜக போராட்டம் நடத்துமா? அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி!

    இந்தியாவில் சுமார் 10 ஆண்டுகளாகவே பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை என்னவாக உள்ளதோ அதற்கேற்ப விலை மாற்றப்படும்.

    அதன்படி பெட்ரோல், டீசல் விலை அன்றாடம் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், பெட்ரோல், டீசல் விலை ஒரு ரூபாய் கூட குறையவில்லை.

    இந்தியா

    இந்தியா

    இந்தியாவின் பெட்ரோல், டீசல் தேவைகள் பெரும்பாலும் இறக்குமதி மூலமே நிறைவேற்றப்படுகிறது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை என்னவாக உள்ளது என்பது முக்கியம். உக்ரைன் போருக்குப் பின்னர் கச்சா எண்ணெய் விலை மளமளவென உயர்ந்து உச்சத்திற்குச் சென்றது. அப்போது இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டது. இதையடுத்து மத்திய அரசு வரியைச் சற்று குறைத்தது.

    குறைந்தது

    குறைந்தது

    இந்நிலையில், இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் இப்போது 94 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. நேற்று இது 91 டாலர் வரையிலும் கூட சென்றது. கடந்த ஆறு மாதங்களில் இதுதான் குறைந்தபட்ச விலையாகும். இருப்பினும், உள்ளூர் சந்தையில் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை.

    நஷ்டம்

    நஷ்டம்

    கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருந்த போதும் கடந்த சில மாதங்களாக அரசு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 20-25 ரூபாய் வரையிலும், ஒரு லிட்டர் டீசலுக்கு 14-18 ரூபாய் வரையிலும் நஷ்டத்தை எதிர்கொண்டன. அரசு நிறுவனங்கள் மட்டுமே விலையைக் குறைத்தன. தனியார் நிறுவனங்கள் தங்கள் நிலையங்களையே மூடிவிட்டன.

    விலைவாசி உயர்வு

    விலைவாசி உயர்வு

    விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவே மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது. இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், இது பெட்ரோலிய நிறுவனங்களுக்கு நிம்மதி தருகிறது. பெட்ரோல் விற்பனையில் இப்போது நிறுவனங்களுக்கு எவ்வித நஷ்டமும் ஏற்படுவதில்லை. அதேநேரம் டீசல் விற்பனையில் லிட்டருக்கு 4-5 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. அதுவும் விரைவில் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உயரவில்லை

    உயரவில்லை

    கடந்த 5 மாதங்களாகவே சர்வதேச சந்தைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை மாற்றாததன் காரணமாக நிறுவனங்கள் மிகப் பெரிய நஷ்டத்தைச் சந்தித்தது. எனவே, அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் சில காலம் பெடரோல்- டீசல் விலையில் மாற்றம் வராது என்றே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதிக்குப் பின்னர் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய ரூபாய் மதிப்பு

    இந்திய ரூபாய் மதிப்பு

    அதேபோல இந்தியா ரூபாயின் மதிப்பும் வேகமாகச் சரிந்து வருகிறது. இப்போது ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாபியன் மதிப்பு 79.62க்கு சரிந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய நாம் இந்திய ரூபாய் மதிப்பில் அதிகமாகச் செலவிட வேண்டி உள்ளது. உள்ளூர் சந்தையில் பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருக்க இதுவும் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

    எப்போது குறையும்

    எப்போது குறையும்

    கடந்த ஜூன் காலாண்டில் மட்டும் பெட்ரோல், டீசல் விற்பனையில் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு 18,480 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இந்த நஷ்டத்தை அரசு பொதுத்துறை நிறுவனங்கள் ஓரளவு ஈடு செய்யும் வரை இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையாது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+