கோரிக்கையை ஏற்காத அமித் ஷா.. மத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை இல்லை.. விவசாயிகள் அதிரடி முடிவு
டெல்லி: மத்திய அரசுடன் 6வது கட்ட பேச்சுவார்த்தையை புறக்கணிக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
மத்திய மோடி அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் கடந்த 13 நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் அரசு 5 கட்டங்களாக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், விவசாயிகளுடன் அரசின் ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின், 13 தலைவர்களுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். மத்திய வேளாண்துறை அமைச்சர் தோமர், உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
நள்ளிரவு வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய கிசான் சபாவின் பொதுச்செயலாளர், ஹன்னன் மொல்லா, விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படாது என உள்துறை அமைச்சர் கூறியதாக தெரிவித்தார்.
சட்டங்களில் திருத்தங்கள் செய்ய அரசு தயாராக இருக்கிறது என்பதை எழுத்து வடிவில் மத்திய அரசு தர இருப்பதாக அவர் கூறியதாகவும், ஹன்னன் மொல்லா தெரிவித்தார்.
அரசு எழுத்து வடிவில் அளிக்கும் திருத்தங்கள் குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 40 விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே அரசுடனான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் ஹன்னன் மொல்லா கூறினார்.
எனவே சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கவில்லை என்பதால் இன்றைய பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும் அமித் ஷாவுடனான கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் மத்தியில் இன்றைய பேச்சுவார்த்தை குறித்து இருவேறு கருத்துகள் காணப்பட்டது. ஒருசில தலைவர்கள் பேச்சுவார்த்தையை புறக்கணிக்கப் போவதாக கூறிய நிலையில் வேறு சில தலைவர்கள், பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்தால் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பது போன்ற கருத்துக்களை வெளியிட்டனர்.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications