5 மற்றும் 8ஆம் வகுப்பு தேர்வில் ஆல் பாஸ் முறை ரத்து! மத்திய அரசு முடிவு
டெல்லி: இனி 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் முறை கிடையாது என்றும், இந்த முறை ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்திருக்கிறது. கற்றல் திறனை மேம்படுத்தவே இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய கல்வித்துறை செயலாளர் சஞ்சய் கமார் தெரிவித்திருக்கிறார்.
இதன் மூலம் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால் அவர்களுக்கு உடனடியாக 2 மாதங்களில் துணை தேர்வு நடத்தப்படும். இதிலும் தோல்வியடைந்தால் மட்டுமே மாணவர்கள் அதே வகுப்பில் தொடர்வார்கள் என்று மத்திய அரசு தனது உத்தரவில் தெரிவித்திருக்கிறது. ஏற்கெனவே மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதியக் கல்விக்கொள்கையில் 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தன. இருப்பினும் இதனை அமல்படுத்தும் விதமாக தற்போது 5,8ம் வகுப்புக்கு ஆல் பாஸ் முறையை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது என கல்வியாளர்கள் விமர்சித்துள்ளனர்.
கல்வியாளர்கள் என்ன சொல்கிறார்கள்?: மத்திய அரசின் உத்தரவு குறித்து செய்தி ஊடகங்களிடம் பேசிய கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, "கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 என்கிற சட்டத்தின் சிறப்பு அம்சமே, குழந்தைகள் கல்வியை பார்த்து பயப்பட கூடாது என்பதுதான். எனவேதான் இந்த சட்டத்தில் 8ம் வகுப்பு வரை வெற்றி/தோல்வியை நிர்ணயிக்கும் தேர்வுகள் கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்டம் ஏதோ மேம்போக்கானதாக கொண்டுவரப்படவில்லை.
ஆய்வுகள்: உலகம் முழுவதும் உள்ள கல்வி முறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அதன் பின்னர் இந்த ஆய்வை அடிப்படையாக கொண்டு இச்சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் ஆசிரியர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதில், எந்தெந்த மாணவர்கள் கற்றலில் பின்தங்குகிறார்களோ, அவர்களை கண்டறிந்து அவர்களின் திறனை மேம்படுத்த கூடுதல் பயிற்சிகளை ஆசிரியர்கள் கொடுக்க வேண்டும். இது இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம்.
சட்ட திருத்தம்: சில ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கல்வி கொள்கையில் சில திருத்தங்களை மேற்கொண்டது. அதன்படி 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வெற்றி/தோல்வியை நிர்மாணிக்கும் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இதனை அந்தந்த மாநிலங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பின்பற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்படி சொல்லிவிட்டு, இப்போது வந்து 5,8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் கிடையாது, தேர்வு நடத்த வேண்டும் என்று கூறுவது மாநில உரிமைகளை கை வைக்கும் நடைமுறையாகும். மாநிலங்கள் மீது மத்திய அரசு தனது முடிவுகளை திணிக்கிறது.
மாநில அரசு: இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால், நாடு முழுவதும் பெரும் பகுதியான பள்ளிகளை மாநில அரசுகள்தான் நடத்துகின்றன. அப்படி இருக்கும் போது தங்கள் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதை மாநில அரசுகள்தான் முடிவு செய்யும். இதில் மத்திய அரசு தலையீடு ஏற்றுக்கொள்ள முடியாது" என்று பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியுள்ளார்.
இவருடைய கருத்துக்களையே பல்வேறு அரசியல் கட்சிகளும், கல்வியாளர்களும் பிரதிபலித்து வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications