இனி ஆன்லைன் தேர்வுகள் கிடையாது... யுஜிசி அதிரடி.. மாணவர்கள் மகிழ்ச்சி
டெல்லி: இனி கல்லூரிகளிலோ, பல்கலைக்கழகங்களிலோ ஆன்லைன் தேர்வுகள் நடத்தக்கூடாது என பல்கலைக் கழக மானியக் குழுவான யுஜிசி (UGC)அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அனைத்து தேர்வுகளும் இனி நேரடியாகவே நடத்த வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானியக் குழு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் இணையதளம் மூலம் தேர்வுகள் நடத்தப்படாது என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது பல்கலை. மானியக்குழுவும் அதை உறுதிபடுத்தி உள்ளது.
டெல்லி: 2020ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா காரணமாக அரசு ஊரடங்கு அறிவித்தது. இதனால் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் பாடம் படித்து வந்தனர்.

மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க அரசாங்கமும் ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதி அளித்திருந்தது. இதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டது. பாடம் மட்டும் இன்றி தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்பட்டது.
இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைய தொடங்கியதால் அனைத்து கல்லூரிகள் திறக்கப்பட்டன. தேர்வுகளும் ஆன்லைனில் நடத்த வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால் இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆன்லைன் வகுப்புகள் புரியவில்லை என்பதால் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மாணவர்கள் நேரடி தேர்வு எழுத 2 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இனிமேல் கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகள் நேரடியாக நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழக மானிய குழு செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் கடிதம் எழுதியுள்ளார். இனிமேல் ஆன்லைனில் தேர்வுகள் நடத்த வேண்டாம் என பல்கலைக்கழக மானிய குழு திட்டவட்டமாக கூறியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications