டெல்லி டூ குஜராத் வரை.. ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கங்களுக்கு அனுமதி இல்லை.. திட்டவட்டமாக சொன்ன மத்திய அரசு
டெல்லி: ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கங்களுக்கு அனுமதியில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆரவல்லி மலைத்தொடரில் புதிய சுரங்க குத்தகைளை வழங்க மாநில அரசுகளுக்கு அனுமதியில்லை என்றும், டெல்லி முதல் குஜராத் வரையிலான முழு ஆரவல்லி மலைத்தொடரும் பாதுகாக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகின் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றாக ஆரவல்லி மலைகள் உள்ளன குஜராத், ஹரியானா, டெல்லி வரை பரவியிருக்கும் ஆரவல்லி மலைத்தொடர் குறித்து அண்மையில், மத்திய அமைச்சகம் அமைத்த குழு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்பித்தது.

ஆரவல்லி மலைத் தொடர்
அதில், நிலப்பரப்பிலிருந்து குறைந்தது 100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலைகளை மட்டுமே 'ஆரவல்லி மலை' என அங்கீகரிக்க முடியும். மேலும், 500 மீட்டருக்குள் அமைந்திருக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மலைகளை மட்டுமே 'ஆரவல்லி மலைத்தொடர்' என அழைக்க முடியும் என்றனர்.
இந்த விளக்கத்தை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. ஆரவல்லி மலை தொடர் என்பது இயல்பாகவே உயரம் குறைவானது. எனவே, உயரத்தின் அடிப்படையில் அதை வரையறை செய்வது தவறானது எனவும், இது சுற்றுச்சூழல் பேரழிவுக்கு வழி ஏற்படுத்தும் என்று இயற்கை ஆர்வலர்கள் கண்டித்து இருந்தனர்.
சுரங்கங்களுக்கு அனுமதி இல்லை
இந்த நிலையில்தான், ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கங்களுக்கு அனுமதி இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆரவல்லி மலைத்தொடரில் எந்த ஒரு புதிய சுரங்க குத்தகைகளையும் வழங்க மாநில அரசுகளுக்கு தடை விதிப்பதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் கூறியுள்ளது.
டெல்லி முதல் குஜராத் வரை
டெல்லி முதல் குஜராத் வரையிலான முழு ஆரவல்லி மலைத்தொடரையும் அரசு பாதுகாக்கும் என்றும் மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. 'ஆரவல்லி மலை' என்பதற்கான புதிய வரையறையை நீதிமன்றம் அங்கீகரித்ததே இதற்குக் காரணம். இந்தத் தீர்ப்பு வட இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலப் பயன்பாடு மீது தாக்கத்தை ஏற்படுத்தும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஹேஸ்டேக் போட்டு சமூக ஆர்வலர்கள் குரல்
பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய ஆரவல்லி மலைகளை இப்படிக் குறுகிய முறையில் வரையறுப்பது, சட்டவிரோதச் சுரங்கம் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு வழிவகுக்கும் என இயற்கை ஆர்வலர்கள் கூறியிருந்தனர். Save Aravalli என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைத்தளங்களிலும் குரல் கொடுத்தனர். டெல்லி, ஹரியானாவில் போராட்டமும் நடைபெற்ற நிலையில், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications