நீண்ட நாள் ஆசை பலிக்குது.. நெகிழ்ந்த தாய்.. இறந்தவரின் உயிரணுவை செயற்கை கருத்தரிக்க தரலாம்: ஹைகோர்ட்
டெல்லி: இறந்தவரின் உயிரணுவை செயற்கை கருத்தரிக்க வழங்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஐகோர்ட்டு முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறது.. இந்த உத்தரவானது, தேசத்தின் கவனத்தை வெகுவாக பெற்று வருகிறது.. வழக்கின் சாராம்சம் என்ன? நீதிபதி உத்தரவு என்ன?
டெல்லியை சேர்ந்த அந்த இளைஞர் ஜூன் 2020ம் ஆண்டு, டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குப் புற்றுநோய் பாதிப்பு உறுதியானது.. அவருக்கு திருமணம் ஆகவில்லை..

புற்றுநோய்: புற்றுநோய்க்கான சிகிச்சையும் ஆரம்பமானது.. இந்த சிகிச்சையின்போது கதிர்வீச்சு உடலில் எதிர்மறையான விளைவுகளையும் மலட்டுத்தன்மையையும் ஏற்படுத்தும் என்பதால், கீமோதெரபிக்கு முன்பு நோயாளியின் விந்துவை பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, அவரது விந்தணுவும் குளிருட்டப்பட்ட ஆய்வகத்தில் வைத்து மருத்துவமனை நிர்வாகம் பராமரித்தது. பிறகு நோயாளி வேறு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு விட்டார்.
இந்த நோயாளி செப்டம்பர் 2020ம் ஆண்டு, சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.. நோயாளியின் மரணத்திற்கு பிறகு, சர் கங்கா ராம் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த விந்தணுவை திருப்பித் தருமாறு அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்..
வாடகை தாய்: வாடகை தாய் மூலம் செயற்கை கருத்தரிக்க வைக்க தங்கள் மகனின் உயிரணுவை ஒப்படைக்க கோரி மருத்துவமனை நிர்வாகத்தை பெற்றோர் தரப்பில் அணுகினர். ஆனால் மருத்துவமனை தர மறுத்துவிட்டது.. இந்த விவகாரம் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இறந்தவரின் ஒரே அடையாளமாக இருக்கும் அந்த விந்தணுவைத் தர, மருத்துவமனை மறுப்பது, மனுதாரரின் உரிமைக்கு எதிரானது" என்று கோர்ட்டில் வாதம் முன்வைக்கப்பட்டது.
உயிரணுக்கள்: ஆனால், ART ஒழுங்குமுறைச் சட்டம் 2021, ICMR வழிகாட்டுதல்கள் மற்றும் வாடகை தாய்மை மசோதா ஆகியவற்றில் திருமணமாகாத ஒருவரின் உயிரணுவின் சட்டப்பூர்வமான உரிமை யாருக்கு இருக்கிறது என்பது குறித்து எதுவும் சொல்லப்படவில்லை என்று மருத்துவமனை தரப்பில் தரப்பட்டது.
எனினும், சட்டப்படி உயிரணு தர மறுத்த மருத்துவமனை நிர்வாகம், கோர்ட்டு உத்தரவிட்டால் வழங்குவதாக தெரிவித்தது. இதற்கு பிறகே, டெல்லி அரசு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டு, கடந்த 2022 நோட்டீஸ் அனுப்பி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
உத்தரவு: இதில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிகாட்டு முறைப்படியும், வாடகை தாய் சட்டப்படி இறந்தவரின் உயிரணுவை வழங்கிடலாம் என அறிக்கை அளித்தது. இறுதியில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரதீபா எம்.சிங் நேற்றைய தினம் முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார்..
அதில், "ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் தன்னுடைய மகன் வழி பேரக்குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கவே செய்யும்.. அதனடிப்படையில் இறந்த மகனின் உயிரணுவை வாடகை தாய் மூலம் செயற்கை கருத்தரிக்க கோரியதில் நியாயம் இருக்கவே செய்கிறது..
மருத்துவமனை : ஒருவரின் இறப்பிற்கு பிறகு அவரது உயிரணு மூலம் மீண்டும் செயற்கை கருத்தரிக்க செய்வதற்கு இந்திய சட்டத்தில் தடை எதுவுமில்லை.. அதனால், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் அறிக்கை கவனத்தில் கொண்டு இறந்த மகனின் உயிரணுவை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கங்கா ராம் மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிடப்படுகிறது" என்று உத்தரவிட்டுள்ளார்.
இறந்த மகனின் விந்து வேண்டும் என்று கேட்டு, பெற்றோர் போராடிய இந்த வழக்கு, பலரது கவனத்தையும் பெற்று வந்ததை மறுக்க முடியாது.. இதுபோன்ற விசித்திர வழக்கு, இதற்கு முன்பே நம்முடைய நாட்டில் நடந்துள்ளது..
உயிரணு: கடந்த 2018ம் ஆண்டில் மராட்டியத்தில் புனே மாவட்டத்தில் இப்படி ஒரு வழக்கு நடந்திருக்கிறது.. பிரதமேஷ் பாட்டீல் என்பவரின் உயிரணுவை, அவரது அம்மா ஸ்ரீ பாட்டீலிடம் டாக்டர்கள் அப்போது ஒப்படைத்திருந்தனர்.. அவர் வாடகைத்தாய் முறை மூலம், இரட்டைக் குழந்தைகளுக்கு பாட்டியானார். அதேபோல கேரளாவில் கார் விபத்தில் பலியான கணவரின் உயிரணு மூலம் இளம்பெண் ஒருவர், இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார்.
அந்தவகையில், நேற்றைய டெல்லி ஹைகோர்ட் உத்தரவையடுத்து, இறந்து போன தன்னுடைய மகன் வழி பேரக்குழந்தையை பார்க்கும் ஆவலில் காத்திருக்கிறார்கள் பாசத்துக்குரிய தாத்தா, பாட்டி..!!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications