பெட்ரோல், டீசல், LPG தட்டுப்பாடு இல்லை.. நாடாளுமன்றத்தில் அடித்து சொன்ன மத்திய அமைச்சர்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஈரான் போர் காரணமாக நாடு முழுவதும் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் பற்றாக்குறை நிலவி வருகிறது. ஓட்டல்களுக்கு வர்த்தக சிலிண்டர் விநியோகம் தடை செய்யப்பட்டிருக்கிறது. மறுபுறம் பெட்ரோல் பங்குகள் காலியாகியுள்ளதால் மூடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், இது குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், விநியோகச் சங்கிலிகள் சீராகச் செயல்படுவதாகவும் கூறியிருக்கிறார்.

"டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய் பற்றாக்குறை இல்லை. அவற்றின் இருப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதும் விநியோகச் சங்கிலிகள் சீராக செயல்படுகின்றன" என்று அமைச்சர் பூரி குறிப்பிட்டார். ஒட்டுமொத்த எரிபொருள் விநியோகமும் நிலைத்தன்மையுடன், நாட்டின் தேவைக்குப் போதுமான இருப்புகளோடு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No Shortage of Petrol

தட்டுப்பாடு இல்லை

உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் எரிசக்தி சந்தை இடையூறுகளுக்கு மத்தியிலும், உள்நாட்டு சமையல் எரிவாயு விநியோகம் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதாக அமைச்சர் பூரி உறுதி அளித்தார். சமீப ஆண்டுகளில், ஒரு குறிப்பிட்ட நாட்டிடமிருந்து மட்டும் எரிபொருளை வாங்காமல், ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளிடமிருந்து எரிபொருளை இந்தியா வாங்கி வருகிறது. இந்தியா தனது எரிசக்தி ஆதாரங்களைப் பன்முகப்படுத்தியுள்ளது என்றும் கூறினார்.

முன்பு இந்தியாவின் 60 சதவிகித சமையல் எரிவாயு இறக்குமதி வளைகுடா நாடுகளிலிருந்து வந்த நிலையில், தற்போது பலதரப்பட்ட ஆதாரங்கள் மூலம் விநியோகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பிராந்திய இடையூறுகளுக்கான பாதிப்பைக் கணிசமாகக் குறைக்கிறது என அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

நிலைமையை கண்காணித்து வருகிறோம்

உலகளாவிய விநியோக இடையூறுகள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற சவால்கள் இருந்தாலும், இந்தியாவின் எரிபொருள் விநியோகச் சங்கிலி வலிமையாகவே உள்ளது. இடையூறுகளைச் சமாளிக்க, போதுமான இருப்பு மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட இறக்குமதி ஆதாரங்கள் நாட்டில் உள்ளன. தடையில்லா எரிபொருள் இருப்பை உறுதி செய்ய, உலக எரிசக்தி நிலவரத்தை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்று அமைச்சர் பேசியுள்ளார்.

தட்டுப்பாடு தீவிரம்

ஆனால், சென்னை போன்ற நகரங்களில் ஓட்டல்களுக்கான வணிக சிலிண்டர் விற்பனை நிறுத்தப்பட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் காலியானதால் தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் பங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இரண்டாம் தர நகரங்களில் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமாக இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

முன்னதாக நாடாளுமன்றத்தில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.

ராகுல் காந்தி விமர்சனம்

"யாரிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை அமெரிக்கா முடிவெடுக்கிறது. இதற்கு ஒரே காரணம் நம் நாட்டை ஆள்பவர்கள் சரணடைந்து விட்டார்கள் என்பதுதான். இந்த அவையில் தற்பொழுது உட்கார்ந்திருக்க கூடிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி எப்ஸ்டீனை தனது நண்பர் என கூறியிருக்கிறார்" என்று விமர்சித்திருந்தார்.

எப்ஸ்டீன் பெயரை சொன்னவுடன் இதை ஏற்க முடியாது என அவை தலைவர் ஓம் பிர்லா கண்டித்தார். நீங்கள் அனுமதி கேட்ட விஷயத்தை பற்றி மட்டும் தான் பேச வேண்டும் என, ஓம் பிர்லா கூற.. அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி அமைச்சர் நாட்டின் எரிவாயு நிலை குறித்து அறிக்கையை வாசித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+