அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்!
டெல்லி: ஈரான் போர் காரணமாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்திருக்கிறது. நிலைமையை சமாளிக்க, 30 நாட்களுக்கு ஈரான் எண்ணெய்யை வாங்கிக்கொள்ள அமெரிக்கா பெர்மிஷன் கொடுத்திருக்கிறது. இருப்பினும், இந்தியா எண்ணெய் வாங்கவில்லை.
இதற்கு முன்னர் நாம், ஈரானிடமிருந்து எண்ணெய்யை வாங்கிருக்கிறோம். குவாலிட்டி எல்லாம் பக்காவாகத்தான் இருக்கும். ஆனால், இதில் வேறு சில பிரச்சனைகள் இருப்பதால் எண்ணெய் வாங்குவதை தவிர்த்து வருகிறோம்.

அமெரிக்கா சொன்னது என்ன?
ஏற்கெனவெ நமக்கும், ஈரானுக்கும் இடையே இருந்த எண்ணெய் வர்த்தக உறவு அறுந்து போக காரணமே இந்த அமெரிக்காதான். எண்ணெய் வாங்கினால் வரி போடுவேன் என பயமுறுத்தியது. எனவே, கடந்த 5 ஆண்டுகளாக ஈரானிடம் எண்ணெய் வாங்கவில்லை. இப்படி இருக்கையில், போர் காரணமாக 30 நாட்களுக்கும் மட்டும் ஈரானிடம் வாங்கிக்கோங்க என்று டிரம்ப் கூறியிருக்கிறார்.
காலக்கெடு மிகவும் குறைவு
அமெரிக்கா வழங்கியுள்ள இந்த ஒரு மாத கால அவகாசம் எண்ணெய் வர்த்தகத்திற்குப் போதுமானதல்ல. ஒரு ஒப்பந்தத்தைப் பேசி முடிக்கவும், கப்பல் போக்குவரத்து, காப்பீடு மற்றும் பணப் பரிமாற்றங்களைச் செய்யவும் 30 நாட்கள் என்பது மிகக் குறுகிய காலம்.
ஒருவேளை கப்பல் வந்து சேருவதற்குள் இந்த காலக்கெடு முடிந்துவிட்டால், இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு ஆளாக நேரிடும் என்ற பயம் உள்ளது. எனவே அமெரிக்கா சொன்ன பேச்சுக்கெல்லாம் நம்மால் ஆட முடியாது.
கப்பல் காப்பீடு சிக்கல்கள்
எண்ணெய் ஏற்றி வரும் கப்பல்களுக்குப் பல கோடி ரூபாய்க்கு மதிப்பிலான காப்பீடு அவசியம். பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவை. அவை ஈரான் தொடர்பான வர்த்தகத்திற்குப் பொறுப்பேற்கத் தயங்குகின்றன. முறையான காப்பீடு இல்லாத கப்பல்களை இந்தியத் துறைமுகங்கள் அனுமதிக்காது. இது ஈரானுடனான வணிகத்திற்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உள்ளது.
பணப் பரிமாற்றத்தில் தடை
சரி இதெல்லாம் கூட எப்படியாவது சமாளித்துவி்டலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், இதைவிட பெரிய பிரச்சனை இருக்கிறது. பணம் செலுத்துவதுதான் அந்த பிரச்சனை. அமெரிக்கா மற்றும் இதர மேற்கு நாடுகளுடன் வணிகம் செய்தால், அதற்கு SWIFT மூலம் பணம் செலுத்தலாம். கூகுள் பே மாதிரி, பணம் செலுத்த இது ஒரு வழிமுறை. ஆனால், ஈரானுக்கு இப்படி பணம் செலுத்த முடியாது. SWIFT-இல் இருந்து ஈரான் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஈரானுக்குப் பணம் செலுத்த எந்த வங்கிகளைப் பயன்படுத்துவது? எந்தப் பணத்தில் பணம் செலுத்துவது? என்பது போன்ற கேள்விகளுக்கு இன்னும் தெளிவான பதில் இல்லை. 5 ஆண்டுகளாக ஈரானுடன் நேரடி வர்த்தகம் இல்லாததால், பழைய பணப் பரிமாற்ற முறைகள் தற்போது செயல்படாமல் உள்ளன.
அரசின் வழிகாட்டுதல் இல்லை
மறுபுறம், மத்திய அரசிடம் இருந்து முறையான 'கொள்கை வழிகாட்டுதல்' அல்லது 'பாதுகாப்பு அரண்' இல்லாத வரை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தன்னிச்சையாக முடிவெடுக்க அஞ்சுகின்றன. இதன் காரணமாகத்தான் ஈரான் எண்ணெய்யை வாங்க நம்மூர் நிறுவனங்கள் தவிக்கின்றன.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications