நபிகள் நாயகம் சர்ச்சை- நுபுர் சர்மாவை ஆக.10 வரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
டெல்லி: நபிகள் நாயகம் சர்ச்சை விவகாரத்தில் பாஜக மாஜி நிர்வாகி நுபுர் சர்மாவை ஆகஸ்ட் 10-ந் தேதி வரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
நபிகள் நாயகம் தொடர்பாக பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாக பேசியிருந்தார். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நுபுர் சர்மாவின் கருத்துக்காக அரபு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகள் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. மத்திய அரசு பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தின. ஆனாலும் மத்திய அரசு இது தொடர்பாக இடைவிடாமல் விளக்கம் தந்து கொண்டிருந்தது.

இதன்பின்னர் பாஜகவில் இருந்து நுபுர் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதேநேரத்தில் அவரை கைது செய்ய கோரி நாட்டின் பல பகுதிகளில் வன்முறைகள் வெடித்தன. இது தொடர்பாக பல மாநிலங்களில் வழக்குகளும் தாக்கல் செய்யபட்டன. நுபுர் சர்மாவின் கருத்துகளை ஆதரித்த ஒருவர் ராஜஸ்தான் பகிரங்கமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நுபுர் சர்மாவை மிக கடுமையாக விமர்சித்தது. நாட்டு மக்களிடம் பகிரங்கமாக, டிவியில் தோன்றி நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என விளாசினர் நீதிபதிகள். தம் மீதான இந்த விமர்சனங்களை நீதிபதிகள் திரும்பப் பெற வேண்டும்; தம் மீதான வழக்குகளை ஒருங்கிணைத்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நுபுர் சர்மா முறையிட்டார்.
நுபுர் சர்மாவின் மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ஆகஸ்ட் 10-ந் தேதி அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் வரை இவ்வழக்கில் அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது; மேலும் நுபுர் சர்மா மீது வழக்குகளை பதிவு செய்த மகாராஷ்டிரா, தெலுங்கானா, மேற்கு வங்கம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் அஸ்ஸாம் மாநில அரசுகள் பதில் மனுத் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
69% இடஒதுக்கீடு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.. மனுக்கள் தள்ளுபடி.. என்ன நடந்தது? -
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications