ஆபரேஷன் சிந்தூர் வெறும் டிரெய்லர் தான்.. இந்தியாவின் திட்டம் என்ன? - விளக்கும் Ex ராணுவ அதிகாரி
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இது டிரெய்லர் தான். பாகிஸ்தான் பதிலடி கொடுத்தால் இந்தியா தன் முழு பலத்தை களமிறக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி, சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 26 அப்பாவிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.

அதன்படி நள்ளிரவு முதல் இந்திய ராணுவம், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் நாட்டுக்குள் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஆகிய தீவிரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியானது.
1972 ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில், இந்தியா போர் அல்லாமல் நடத்தியுள்ள மிகப்பெரிய தாக்குதல் இது என்று தகவல் வெளியாகியுள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான இந்த பதிலடி தாக்குதலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு குவிந்து வருகிறது. இது பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் மட்டுமே. பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான தாக்குதல் இல்லை என்று இந்தியா கூறியிருந்தது.
ஆனாலும் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு, உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று அந்த நாடு அறிவித்துள்ளது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் குறித்து காலை 10 மணியளவில் இந்திய ராணுவம் விளக்கமளிக்க உள்ளது.
இந்நிலையில் இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி (பிரிகேடியர்) கோவிந்த் சிங் சிசோடியா பிடிஐக்கு அளித்துள்ள பேட்டியில், "பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ராணுவம் மிகவும் தெளிவாக திட்டமிட்டு இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நகர்வு தான்.
இந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். இது ஏதோ குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நடத்தப்படும் தாக்குதலாக கருத வேண்டாம். பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படை நடத்தியிருக்கும் தாக்குதல் வெறும் ட்ரெய்லர் தான். இதிலிருந்து பாகிஸ்தான் பாடம் கற்க வேண்டும்.
தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா விடுத்துள்ள வலுவான செய்தியை புரிந்து கொள்ள வேண்டும். அதைவிடுத்து இதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க நினைத்தால் இந்தியாவின் தாக்குதல் மிகவும் தீவிரமாக இருக்கும். அது அவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்." என்று எச்சரித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications