விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா மீது விவாதம் நடத்த மறுப்பது ஏன்? எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா மீது விவாதம் நடத்த மத்திய அரசு மறுப்பதற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று லோக்சபாவில் விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார்.

அப்போது இம்மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் முழக்கம் எழுப்பினர். எதிர்க்கட்சி எம்.பிக்களின் அமளிகளுக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டதாக லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்தார்.

மல்லிகார்ஜூன கார்கே

மல்லிகார்ஜூன கார்கே

ஆனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், மூன்று விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றிருப்பதை வரவேற்கிறோம். ஆனால் விவசாயிகளின் போராட்டத்தின் போது நிகழ்ந்த லக்கிம்பூர் படுகொலை உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். இப்போதும் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆகையால்தான் விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா மீது விவாதம் வேண்டும் என்கிறோம்.

நாடாளுமன்றத்தில் விவாதம் தேவை

நாடாளுமன்றத்தில் விவாதம் தேவை

மத்திய அரசோ, திரும்பப் பெறும் மசோதாக்கள் மீது விவாதம் நடத்துவது மரபு அல்ல என்கிறது. இதுவரை 17 திரும்பப் பெறும் மசோதாக்கள் மீது நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன. அதன்பட்டியலை நாங்கள் வெளியிட்டுள்ளோம். தற்போது லோக்சபாவில் விவாதம் இல்லாமல் மசோதாவை நிறைவேற்றி இருப்பதன் மூலம் நாங்களும் உங்களுக்கு சாதகமாக செயல்படுகிறோம் என விவசாயிகளை நம்ப வைக்கிற மத்திய அரசின் முயற்சி மட்டும்தான் இது. விளைபொருட்களுக்கான ஆதார விலையை நிர்ணயிப்பதற்கான சட்டம், லக்கிம்பூரில் 4 விவசாயிகள் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டது ஆகியவை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றார்.

திமுக, திரிணாமுல், தேசிய மாநாட்டு கட்சி எதிர்ப்பு

திமுக, திரிணாமுல், தேசிய மாநாட்டு கட்சி எதிர்ப்பு

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரைக் ஓ பிரைன், 2017-ல் நாடாளுமன்றத்தில் திரும்பப் பெறும் மசோதாக்கள் மீது 6 எம்.பிக்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்திருக்கின்றனர். இப்போது மத்திய அரசு மறுப்பது என்பது வெட்கக் கேடானது. இது ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய கேடானது என கூறியுள்ளார். இதேபோல் தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர் ஒமர் அப்துல்லா, திரும்பப் பெறும் மசோதாக்கள் மீது விவாதம் இல்லை என்பது புதிய இந்தியாவின் நவீன ஜனநாயக மாடல் என்று சாடியுள்ளார். திமுகவின் எம்.பி. டி.ஆர்.பாலு, செய்தியாளர்களிடம் கூறுகையில், திரும்பப் பெறும் மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். விளைபொருட்களுக்கான ஆதார விலையை நிர்ணயிக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என்றார்.

பிரகலாத் ஜோஷி விளக்கம்

பிரகலாத் ஜோஷி விளக்கம்

இதற்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்றத்தில் விவசாய சட்டங்களைக் கொண்டு வரும் போது விவாதம் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. தற்போது மீண்டும் எதற்காக விவாதம் நடத்த வேண்டும்?. விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் போது ஏன் இத்தகைய அமளியில் ஈடுபட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். மேலும் மத்திய அரசின் இந்த போக்கைக் கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+