ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா வேட்பு மனுத் தாக்கல் செய்தார்!
டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். யஷ்வந்த் சின்ஹா வேட்பு மனுத் தாக்கலின் போது ராகுல் காந்தி, சரத்பவார், பரூக் அப்துல்லா, ஆ.ராசா, அகிலேஷ் யாதவ், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட 12 கட்சிகளின் தலைவர்கள் உடனிருந்தனர்.
நாட்டின் புதிய ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக திரெளபதி முர்மு வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிடுகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா. செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்த யஷ்வந்த் சின்ஹா, ரப்பர் ஸ்டாம்பாக இருப்பவர் நாட்டின் ஜனாதிபதி மாளிகைக்கு தேவையில்லை. ரப்பர் ஸ்டாம்ப்பாக செயல்படும் ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் தேசத்துக்கு பேரழிவு ஏற்படும். நான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் அரசியல் எதிரிகளை குறிவைக்க அரசு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவேன் என கூறியிருந்தார்.
யஷ்வந்த் சின்ஹாவுக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும் ஆதரவை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் யஷ்வந்த் சின்ஹா இன்று தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
யஷ்வந்த் சின்ஹா வேட்புமனுத் தாக்கல் செய்த போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா, திமுகவின் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், இடதுசாரி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
-
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்?












Click it and Unblock the Notifications