உற்று பாருங்க.. உங்களுக்கு என்ன கலர் முதலில் தெரியுது.. உங்க கேரக்டரை புரிஞ்சிக்க சூப்பர் ட்ரிக்ஸ்
டெல்லி: இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தின் நடுவில் உங்களுக்கு என்ன கலர் தெரிகிறது என்பதை வைத்து உங்களின் ஐ க்யூ லெவல் எப்படி இருக்குன்னு கண்டுபிடிக்கும் ஒரு ஜாலியான சோதனைதான்.
வெள்ளை மற்றும் கருப்பு நிற நீண்ட கோடுகள் அடங்கிய வட்ட வடிவிலான படத்தின் மையப்பகுதியை உற்று நோக்கினால், உங்களுக்கு அதில் சில மாறுபட்ட வண்ணங்கள் தெரியலாம்.
மையத்தில் என்ன நிறம் தெரியுதுன்னு பாருங்க..அதில் உங்களுக்கு தெரியும் வண்ணத்தின் அடிப்படையில் உங்கள் ஐ க்யூ எப்படி இருக்கிறதுன்னு பார்க்கலாம் வாங்க..

படத்தில் நீலம் நிறம் தெரிந்தால்..
உங்கள் கண்ணுக்கு நீலம் நிறம் தெரிந்தால் உங்களின் பெர்ஷப்ஷன் என சொல்லப்படும் உணர்திறன் சிறப்பாக உள்ளது எனலாம். தெளிவான மன நிலையை கொண்ட நீங்கள், வாழ்க்கையின் அர்த்தங்களை நன்றாக உணர்ந்து வைத்திருப்பீர்கள்.

நம்பிக்கைக்குரிய நபராக
இதனால், நீங்கள் சிக்கலான முடிவுகளை எளிதாக எடுக்கலாம். நீங்கள் ஒரு திறன் மிக்க பணியாளராகவும் குழுவாக பணியாற்றுவதில் வல்லவராக இருப்பீர்கள். உங்களின் கருத்துக்களை தெளிவாக எடுத்துரைப்பவராகவும் நேர்மையானவராகவும் இருப்பதனால், நம்பிக்கைக்குரிய நபராக இருப்பீர்கள். சிக்கலான விஷயங்களுக்கு கூட உங்கள் ஆலோசனையை எதிர்பார்த்து பலரும் உங்களை நாடுவார்கள்.

சிவப்பு நிறம் தெரிந்தால்...
சராசரிக்கும் மேலான அறிவாற்றல் மற்றும் சிறந்த உள்ளுணர்வு திறன் கொண்டவராக விளங்கும் நீங்கள் எந்த பிரச்சினையையும் எளிதில் தீர்த்து வைப்பவராக இருப்பீர்கள். துயரமான தருணங்களில் கூட உங்களை நாடி சற்று நிம்மதி அடையலாம் என உங்கள் நண்பர்கள் உங்களை நாடுவர். இயற்கையாகவே தலைமைப்பண்பு கொண்டவராக இருக்கும் நீங்கள், பிறர் மீது ஆதிக்கம் செலுத்தும் நபராகவும் இருப்பீர்கள்.

ஜாலியான சோதனை
இந்த ஒளி பிம்பத்தை கொண்டு ஐ க்யூ லெவலை அறிந்து கொள்ளும் முயற்சி ஒரு ஜாலியான சோதனையே தவிர இதை தீவிரமாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. உங்களின் உண்மையான ஐ க்யூ லெவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஐ க்யூ டெஸ்ட் எடுத்துக்கொள்வதே சிறந்த வழியாகும்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications