வரிக்குதிரைகளுக்கு நடுவே ஒரு சிங்கம் பதுங்கியிருக்கு! உங்களுக்கு தெரியுதா? கண்டுபிடிச்சா ஸ்மார்ட்
டெல்லி: இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்டிகல் இல்யூசன் படத்தில் வரிக்குதிரைகளுக்கு இடையே ஒரு சிங்கம் பதுங்கியிருக்கிறது. அந்த சிங்கத்தை 10 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்க ஸ்மார்ட் தான்..
எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆப்டிகல் இல்யூசன் படங்களுக்கு தனி இடம் உண்டு என்றே சொல்லலாம்.
ஆப்டிகல் இல்யூசன் படங்களில் மறைந்திருக்கும் ஒரு விஷயத்தை நம் கண்கள் தேடும் போது முதலில் குழம்பிவிடும்.

ஆப்டிகல் இல்யூசன் படம்
ஆரம்பத்தில் இது போன்ற படங்களை பார்க்கும்போது ஒரு பார்வையும், வேறு கோணத்தில் பார்க்கும் போது ஒரு பார்வையும் நம் கண்களுக்கு தெரியும். இவ்வாறு கண்களை குழப்பி பார்ப்பவர்களை திணறடிக்க செய்வதே ஆப்டிகல் இல்யூசன் படம் என்று சொல்லலாம். இது போல் மூளைக்கும் இது போன்ற ஆப்டிகல் இல்யூசன் படங்கள் வேலை கொடுக்கும். இதனால் தான் நெட்டிசன்கள் மத்தியில் இது போன்ற ஆப்டிகல் இல்யூசன் படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அறிவுத்திறன் சோதனை
இந்த படங்களில் மறைந்திருக்கும் அல்லது வெளிப்படையாக தெரியாத ஒரு பொருளையோ அல்லது விலங்குகளையோ நாம் முதல் ஆளாக கண்டுபிடித்துவிட வேண்டும் என்பதற்காகவும், ஒரு சிலர் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை.. நமது நண்பர்களால் கண்டுபிடிக்க முடிகிறதா.. என்று அவர்களுக்கு அனுப்பி அவர்களது அறிவுத்திறனையும் சோதித்து பார்ப்பர். ஆனால் இது போன்ற படங்களை சற்று உற்று நோக்கி பார்த்தால், அல்லது பார்க்கும் கோணங்களை மாற்றினால் ஒரு சில படங்களில் கண்டுபிடிக்க முடியும்.

சிங்கத்தை கண்டுபிடிக்கனும்
ஒரு சில படத்தில் எவ்வளவு முயன்றும் கேட்கப்பட்டுள்ள புதிர்களுக்கு நம்மால் விடையளிக்க முடியாது. ஆனால் டிப்ஸ் கொடுத்தால் எளிதில் கண்டுபிடிக்க முடியும். அந்த அளவுக்கு இதுபோன்ற படங்கள் தங்களது கண்களை குழப்பிவிடும். சரி அப்படி தான் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூசன் படம் டிரண்டாகி வருகிறது. இந்த படத்தில் காட்டில் சில வரிக்குதிரைகள் கூட்டமாக நின்று மேய்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் அங்கு ஒரு சிங்கம் வேட்டாயாடுவதற்காக காத்துக்கொண்டிருக்கிறதாம். அதை கண்டுபிடிப்பதே இன்றைய சவால்...

கண்டுபிடிச்சா கிரேட்
அதுவும் 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும் என்று சவால் விடுக்கப்பட்டுள்ளது. சரி வாருங்கள்.. படத்தை உற்று கவனியுங்கள்.. எங்காவது சிங்கம் தெரிகிறதா.. சரி 10 செகண்ட் டைம் எடுத்துக்கொள்ளுங்கள்.. சிங்கத்தை கண்டுபிடிக்க முடிந்ததா?.. இந்த 10 செகண்டில் நீங்கள் சிங்கம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தீர்கள் என்றால் உண்மையிலேயே நீங்க அதி புத்திசாலி தான்.. உங்கள் அறிவுத்திறன் மற்றும் சிந்திக்கும் ஆற்றல் கிரேட் தான்..

சிங்கம் தெரிகிறதா?
சரி 10 செகண்ட் ஆகியும் சிங்கம் எங்கும் இருக்கிற மாறி தெரியலேயே என்று சொல்பவர்கள்... மீண்டும் ஒரு 10 செகண்ட் டைம் எடுத்துக்கொண்டு பார்க்கும் கோணத்தை மாற்றி பாருங்கள்.. இப்போது உங்களால் கண்டுப்பிடிக்க முடிந்ததா?.. இப்போது கண்டுபிடித்தீர்கள் என்று சொன்னால் கூட கிரேட் தான்.. சரி இப்பவும் சிங்கம் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை என்றால் படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது அதை பார்த்து தெரிந்துகொள்ளவும்.












Click it and Unblock the Notifications