எனது தனிப்பட்ட விவரங்களை கசிய விடக்கூடாதுனு போலீசுக்கு உத்தரவிடுங்க...கோர்ட்டில் திஷா ரவி மனு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி போராட்டம் தொடர்பான டூல்கிட் பகிர்ந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட பெங்களூரு இளம் சூழலியல் ஆர்வலரான திஷா ரவி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தனது தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்ட விசாரணை விவரங்களை, ஊடகம் உள்ளிட்ட எந்தவொரு மூன்றாம் நபருக்கும் கசியவிடக்கூடாது என்று டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

காலிஸ்தான் ஆதரவாளர்களால்தான் டெல்லி வன்முறை தூண்டப்பட்டதாக கூறும் டெல்லி போலீசார், இணையத்தில் குறிப்பாக ட்விட்டரில் உலவிய டூல்கிட்டைக் அதற்கு ஆதாரமாக கூறுகின்றனர்.

பதற்றம் ஏற்படுத்திய பேரணி

பதற்றம் ஏற்படுத்திய பேரணி

மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரபிரதேசம், விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தில் நடைபெற்ற டிராக்டர் பேரணி வன்முறையாக வெடித்தது. காலிஸ்தான் ஆதரவாளர்களால்தான் இந்த வன்முறை தூண்டப்பட்டதாக கூறும் டெல்லி போலீசார், இணையத்தில் குறிப்பாக ட்விட்டரில் உலவிய டூல்கிட்டைக் அதற்கு ஆதாரமாக கூறுகின்றனர்.

திஷா ரவி அதிரடி கைது

திஷா ரவி அதிரடி கைது

இந்த டூல்கிட்டை சூழலியல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் தனது ட்விட்டரில் பகிர்ந்தார். அவர் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் இவ்வழக்கில் சம்பந்தப்பட்டதாகக் கூறி பெங்களூருவில் 22 வயதான திஷா ரவியை டெல்லி போலீஸின் சைபர் பிரிவு கைது செய்துள்ளது. டெல்லி போராட்டத்தில் பங்கெடுக்க விரும்புவோர் போராட்டத்தைப் பற்றியும், அதில் தங்களின் பங்களிப்பை எவ்வாறு செய்ய முடியும் என்கிற விளக்கங்களும் அடங்கிய 'டூல் கிட்' உருவாக்கி அதைப் பலருக்கு பகிர்ந்ததாக குற்றம்சாட்டி திஷா ரவியைக் கைது செய்துள்ளது டெல்லி போலீஸ்.

குவியும் கண்டங்கள்

குவியும் கண்டங்கள்

திஷா ரவி கைதுக்கு நாடு முழுவதும் கடும் கண்டங்கள் எழுந்து வருகிறது. சமூக அக்கறையாளர்கள், சமூக நலப் போராளிகள் மீது அரசு அடக்குமுறையை செலுத்துவதாக எதிர்ப்பு குரல் வலுத்து வருகிறது.சுற்றுச் சூழலியல் ஆர்வலரான திஷா, கிரேட்டா தன்பர்க்கின் 'ஃப்ரைடே'ஸ் ஃபார் ஃபியூச்சர்' (Fridays For Future) என்ற அமைப்பின் கிளையை இந்தியாவில் தொடங்கியவர் ஆவார்.டெல்லி போலீசார் .சுற்றுச் சூழலியல் ஆர்வலரான திஷா ரவியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு

டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு

இந்த நிலையில் திஷா ரவி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், எனது தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்ட விசாரணை விவரங்களை, ஊடகம் உள்ளிட்ட எந்தவொரு மூன்றாம் நபருக்கும் கசியவிடக்கூடாது என்று டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று திஷா ரவி மனுவில் கூறி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+