160 கோடி தடுப்பூசிகள்.. தொடர்ந்து முன்னிலையில் இந்தியா.. இனியாவது கட்டுக்குள் வருமா கொரோனா?
புதுடெல்லி: இந்தியாவில் இதுவரை 161 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசியை ஆயுதமாக உலகநாடுகள் பார்த்துவருகின்றன. எல்லா நாடுகளும் தடுப்பூசி போடுவதை ஊக்குவித்து வருகின்றன.
உலக அளவில் இதுவரை 975 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்தியாவிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. இந்தியாவில் இதுவரை 161.05 கோடியைத் தாண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா
இந்தியாவில் தொடர்ந்து தடுப்பூசி செலுத்துவது அதிகரித்துவருகிறது. உலகிலேயே இந்தியாவில் தான் மிகப்பெரிய அளவில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதுவும் பிரதமர் மோடி தலைமையில் தான் என்று தெரிவித்திருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மான்வியா. தடுப்பூசி போடப்படாதவர்களைக் கண்டறிந்து தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

தடுப்பூசி
இந்தியாவில் தற்போது 58 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸ்மூன்றாவது அலையில், ஏராளமான உயிரிழப்புகளை தடுப்பூசிகள் தடுத்துள்ளன. மக்கள் அதிகமான அளவில், ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டதே காரணம் என்று நிதி ஆயோக்கின் சுகாதாரக் குழு உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்தார். இந்தியாவில் இதுவரை 161.05 கோடியைத் தாண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் தடுப்பூசி
இந்தியாவில் அனைத்து வயதினருக்கும் தற்போது தடுப்பூசி போடப்படுகிறது. பெரியவர்களுக்கு மட்டுமே போடப்பட்டு வந்த தடுப்பூசி தற்போது சிறுவர்களுக்கும் போடப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலானோர் முதல் டோஸ் தடுப்பூசியை எடுத்துவிட்டனர். இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் கால அவகாசம் இருப்பதால், அதுவும் விரைவில் போடப்படும் என்கிறார்கள்.

கேரளா
கேரள மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் 100% செலுத்தப்பட்டு விட்டதாக அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்திருக்கிறார். மேலும் அங்கு 33% பேருக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை கேரளாவில் 5 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கடந்த செப்டம்பர் மாதம் முதலாக தமிழக அரசு கொரோனா தடுப்பூசி முகாமை வாரம் தோறும் நடத்தி வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் இன்று 19வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் 50,000 இடங்களில் நடத்தப்படுகிறது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications